சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

14.11.2024 அன்று இரவு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளைளைவங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு, மறுநாள் (15.11.2024) காலை வங்கியை திறக்க சென்றபோது, வங்கியின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மேற்படி வங்கிகிளையின் மேலாளர் D-1 திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட  எதிரியை கைதுசெய்ய சென்னை பெருநகர  காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப, உத்தரவின் பேரில்D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் A.ஷபீர் அகமது தலைமையில் தலைமைக்காவலர் பிரேம்நாத் (த.கா.35779), முதல் நிலை காவலர்சக்திவேல் (மு.நி.கா. 48148), காவலர்கள் தமிமுல் அன்சாரி (கா.41236), திரு.அன்பழகன்,(கா.56457) திரு.மணிகண்டன் (கா.52435) ஆகியோர்அடங்கிய தனிப்படையினர் மேற்படி வங்கியிலுள்ள மறைக்காணி பதிவுகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு ஒரு நபர் வங்கியினுள் செல்வதும், பிறகுவெளியே செல்வதும், வங்கியிலிருந்த பணம் மற்றும் தங்கநகைகள் எதுவும் திருடு போகவில்லை என்பதும் தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் மேற்படி நபரின் உருவத்தை கொண்டு 25க்கும் மேற்பட்ட மறைக்காணி பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை செய்தும், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை கண்டறிந்து கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., மேற்கண்ட வழக்கில்வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்த மேற்கண்டதனிப்படையினரை நேரில்அழைத்து வெகுவாக பாராட்டி, வெகுமதி வழங்கினார்.