சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் மகள் மோஹிதா 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான சப்–ஜுனியர் இறகுப்பந்து (Badminton) போட்டியில் கலந்து கொண்டு 2ம் இடம் பெற்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான பல்வேறு இறகுப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். (15.03.2025) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப மேற்படி சிறப்பு உதவி ஆய்வாளர் இந்திரசேனன் குடும்பத்தினர் முன்னிலையில் பள்ளி மாணவி மோஹிதாவை பாராட்டி வாழ்த்து கூறினார்.
உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்
