மதுரவாயல் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள்கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள்தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில்தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களைகைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று(11.05.2022) மதியம், போரூர், சுங்கச்சாவடி அருகே கண்காணித்தபோது, ங்கு 1 பெண்உட்பட 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 1.பிரியங்கா (எ) பிரியா, பெ/வ.26, /பெ.கோபாலகிருஷ்ணன், வயர்ல்ஸ் ஸ்டேஷன் ரோடு, போரூர், சென்னை, 2.பாபு, வ/20, த/பெ.கோபாலகிருஷ்ணன், சித்தி விநாயகர் கோயில் தெரு, ஶ்ரீலஷ்மிநகர், மதுரவாயல், 3.கார்த்திக், வ/29, தபெ.ரவி, சோழன் நகர் 2வது தெரு, மதுரவாயல், ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து        7 கிலோ 200 கிராம் எடை கொண்டகஞ்சா மற்றும் 1 செல்போன் றிமுதல் செய்யப்பட்டதுகைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் நேற்று (11.05.2022) நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.