சென்னை, துரைப்பாக்கம், கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்துவரும் சசிகுமார் (எ) புறா, வ/29, த/பெ.மதுரை என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய திருட்டுவழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி என 14குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், சசிகுமார் (எ) புறா கடந்த 26.01.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான்திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், சசிகுமார் (எ) புறா கடந்த 30.05.2022 அன்று, ஷெனாய் நகர், மெட்ரோஇரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக K-3 அமைந்தகரைகாவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பேரில், எதிரி சசிகுமார் (எ) புறா என்பவர் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர், P.பகலவன், இ.கா.ப. மேற்படிஎதிரி சசிகுமார் (எ) புறா என்பவருக்கு, கு.வி.மு.ச. பிரிவு 109ன் கீழ் பிணை ஆவணத்தில்எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்துமீதமுள்ள 236 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து (25.06.2022) உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி சசிகுமார் (எ) புறா நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியகுற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.