1. கண்ணகிநகர் பகுதியில் உறங்கி கொண்டிருந்த அரசுபேருந்து நடத்துநரின் பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் தப்பிய குற்றவாளியை மடக்கிப்பிடித்து, நடத்துநரின் பை மற்றும் இருசக்கர வாகனம்பறிமுதல் செய்யப்பட்டது.
J-11 கண்ணகிநகர் காவல் நிலைய தலைமைக் காவலர்திரு.ஶ்ரீராமதுரை (த.கா.36425) மற்றும் ஊர்காவல்படை வீரர்திருஹரிபிரசாத் (HG5724) ஆகியோர் 12.7.2021 அன்றுஜிப்சி ரோந்து வாகனத்தில் இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.7.2021), ஒக்கியம்துரைப்பாக்கம், OMR சர்விஸ் சாலை, பெட்ரோல் பங்க்அருகில் சுற்றுக் காவல் மேற்கொண்டபோது, அவ்வழியேஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவல் வாகனத்தை பார்த்ததும், இருசக்கர வாகனத்தை திருப்பிதப்ப முயன்றபோது, காவல் குழுவினர் சத்தம் போடவே, 3 நபர்களும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு ஓடினர். காவல் குழுவினர் துரத்திச் சென்று 3 நபர்களில் ஒருவரைபிடிக்க, மற்ற 2 நபர்கள் இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர்.
பிடிபட்ட நபரை விசாரணை செய்தபோது, அவரதுபெயர், தனுஷ், வ/18, த/பெ.சீனிவாசன், கண்ணகிநகர்குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, சென்னை என்பதும், தனுஷ் தப்பிச் சென்ற அவரது நண்பர்கள் குள்ளாபாய் (எ) சாகுல் அமீது மற்றும் தீனா ஆகியோருடன் சேர்ந்து, சற்றுமுன்பு காரபாக்கம் பேருந்து நிலையம் அருகே உறங்கிகொண்டிருந்த அரசு பேருந்து நடத்துனரின் செல்போன்மற்றும் ஆவணங்கள் இருந்த பையை திருடிக் கொண்டுஇருசக்கர வாகனத்தில் வரும்போது பிடிபட்டதும்தெரியவந்தது.
அதன்பேரில், பிடிபட்ட தனுஷ், கைப்பற்றப்பட்டஇருசக்கர வாகனம் மற்றும் பேரந்து நடத்துநரின் பைஆகியவற்றுடன் J-11 கண்ணகிநகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி தனுஷ்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்டநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. மேலும், தப்பிச் சென்ற 2 நபர்களைபிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
2. கீழ்பாக்கம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டிசெல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில்தப்பிய 3 குற்றவாளிகள் கைது– 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர்திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்றுஇரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் டெய்லர்ஸ்சாலை சந்திப்பு அருகே வரும்போது, கார்த்திக் என்பவர்சற்று முன்பு இவ்வழியே சென்றபோது, இருசக்கரவாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னிடம் கத்தியைக் காட்டிமிரட்டி தனது செல்போனை பறித்துச் சென்றதாக காவலர்ரெஜினிடம் கூறினார். காவலர் ரெஜின் குற்றவாளிகளின்அடையாளங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவெண்மற்றும் அடையாளங்களை கேட்டறிந்து, இரவு ரோந்துபணியிலிருந்த தலைமைக் காவலர் பென் அரவிந்த் சாம்(த.கா.27873) மற்றும் முதல்நிலைக் காவலர்திரு.திருக்குமரன் (மு.நி.கா.40048) ஆகியோரை சம்பவஇடத்திற்கு வரவழைத்து, விசாரணை செய்து கீழ்பாக்கம்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ஆதிபகவான் (எ) தாஸ், வ/24, த/பெ.சேட்டு, சென்டிரல் இரயில் நிலையபிளாட்பாரம், 2.ராஜேஷ் (எ) கோவிந்தா, வ/19, காமராஜர்தெரு, நியூ காலனி, கோயம்பேடு, 3.திவாகர் (எ) கருப்பு, வ/24, த/பெ.அந்தோணிசாமி, நேரு நகர் நியூ காலனி, கோயம்பேடு என்பதும், சற்று முன்பு மூவரும் சேர்ந்து ஒருஇருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் வழியில்கீழ்பாக்கம் பகுதியில் கார்த்திக்கிடம் கத்தியைக் காட்டிமிரட்டி செல்போன் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில், அவர்களிடம் இருந்து கார்த்திக்கின்செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்து, பிடிபட்ட 3 குற்றவாளிகளையும் G-3 கீழ்பாக்கம்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின்னர் 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தப்பட்டனர்.
3. நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் நதியில் குதித்துசேற்றில் சிக்சி தவித்த நபரை மீட்ட தமிழ்நாடு சிறப்புகாவல்படை காவலருக்கு பாராட்டு.
ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 5வது அணியில்பணிபுரிந்து வரும் காவலர் சாமிநாதன் (நாயக் எண்.7737), 22.7.2021 அன்று மதியம் சுமார் 01.45 மணியளவில், பணிநிமித்தமாக சென்னையிலுள்ள சீருடை பணியாளர்தேர்வாணையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில்நேப்பியர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் கூவம் ஆற்றை பார்த்தவாறு கூடியிருந்தனர். உடனே காவலர் சாமிநாதன் தனது இருசக்கர வாகனத்தைஓரமாக நிறுத்திவிட்டு சென்றபோது, ஒரு ஆண் நபர்நேப்பியர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்து, மார்பளவு வரையுள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல்தவித்துக் கொண்டிருந்தார். உடனே, சாமிநாதன் அந்தசமயம் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தகயிற்றை எடுத்து ஒரு முனையை பாலத்தில் கட்டி, மற்றொருமுனையில் சுருக்கு போட்டு கயிற்றை இறக்கி, பாலத்தின்பக்கவாட்டில் உள்ள கூவம் ஆற்றின் சேற்றில் சென்றுகயிற்றை அந்த நபரின் உடம்பில் மாட்டி, பொதுமக்கள்உதவியுடன் கயிற்றை மேலே இழுத்து அந்த நபரைகாப்பாற்றினார்.
சேற்றுடன் மீட்கப்பட்ட நபரை பொதுமக்கள்உதவியுடன் தண்ணீர் ஊற்றி கழுவி இளைப்பாற்றிவிசாரணை செய்ததில், அவரது பெயர் கமலகண்ணன், வ/35, த/பெ.சுகுமார், இராயபுரம் என்பதும், மனைவியுடன்சண்டையிட்டு விரக்தியில் நேப்பியர் பாலத்திலிருந்து கூவம்ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. பின்னர் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளைகைது செய்த J-11 கண்ணகிநகர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.ஶ்ரீராமதுரை, ஊர்காவல்படை வீரர்திருஹரிபிரசாத், G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் பென் அரவிந்த் சாம், முதல்நிலைக் காவலர்கள்திரு.ரெஜின், திரு.திருக்குமரன் மற்றும் தற்கொலைக்குமுயன்று கூவம் ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றியதமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரர் சாமிநாதன்ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.7.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.