திருவல்லிக்கேணி சரித்திரப்பதிவு குற்றவாளி சிறையிலடைப்பு

சென்னை, புதுப்பேட்டை, அய்யாசாமி பிள்ளை தெரு, எண்.118 என்ற முகவரியில்வசித்து வரும் மணி (எ) மாறன் (எ) மணிமாறன், வ/29, த/பெ.பிரபு   என்பவர் என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 3 வழக்குகள்உள்ளது. இந்நிலையில், மணி (எ) மாறன் (எ) மணிமாறன் கடந்த  04.06.2022 அன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான்திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம்எழுதி கொடுத்தார்ஆனால், மணி (எ) மாறன் (எ) மணிமாறன் கடந்த 06.07.2022 அன்று, வழிப்பறி செய்த குற்றத்திற்காக F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

அதன்பேரில், எதிரி மணி (எ) மாறன் (எ) மணிமாறன் என்பவர் 1 வருட காலத்திற்குஎந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர், திரு.P.பகலவன், இ.கா.ப., , மேற்படி எதிரி மணி (எ) மாறன் (எ) மணிமாறனுக்கு, கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் பிணைஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள்கழித்து மீதமுள்ள 326 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து  நேற்று(14.07.2022) உத்தரவிட்டார்அதன்பேரில், எதிரி மணி (எ) மாறன் (எ) மணிமாறன் நன்னடத்தை பிணைஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.