இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும்சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளானஅக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியதிருநாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிபாதுகாப்பதற்கான நல்ல இயல்புகளை நாட்டுமக்களிடையே கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டஇரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின்தொலைநோக்கு பார்வையும், நல் எண்ணங்களும் நாட்டுமக்களிடையே சென்று அடையவும், நாட்டு மக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் இந்நாள்தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று(31.10.2022) சென்னை ராஜாஜி சாலை, போர்நினைவுச்சின்னம் அருகே, தீவுத்திடல் நுழைவாயில்அருகில், நடைபெற்ற காவல்துறை கொடி அணிவகுப்பு(Police Flag March) மரியாதையை சென்னை பெருநகரகாவல் கூடுதல் ஆணையாளர் வடக்கு திரு.T.S.அன்பு,இ.கா.ப., அவர்கள் ஏற்றுக்கொண்டார். இப்பேரணியானதுபோர் நினைவுச்சின்னம் அருகிலுள்ள தீவுத்திடல் நுழைவுவாயில் அருகில் தொடங்கி, கொடி மர இல்ல சாலை (Flag Staff Road) வழியாக முத்துசாமி பாலம் வரை சென்றுமீண்டும் போர் நினைவுச் சின்னத்தை வந்தடைந்தது. அதன்பிறகு “தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி”ஏற்கப்பட்டது.
இக்கொடி அணிவகுப்பு பேரணியில் சென்னைபெருநகர காவல்துறையின் ஆயுதப்படை, சிறப்புஅதிரடிப்படை, சிறப்பு அதிவிரைவு படை, காவல் ஆண்மற்றும் பெண் வாத்தியக் குழுவினர் மற்றும் தமிழ்நாடுசிறப்புக் காவல் படை காவல் ஆளிநர்கள் என சுமார் 300காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் துணைஆணையாளர்கள் திரு.I.ஈஸ்வரன் இ.கா.ப., (புளியந்தோப்பு), திரு.இராதகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்கலந்து கொண்டனர்.