கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக, மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்திய பீஹாரைச் சேர்ந்த அக்தர் மற்றும் அப்துல்லா அகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்க. அனுப்பப்பட்டனர்.**********
விசாரணையில் மேற்படி மீட்கப்பட்ட குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களுக்கு மதம் சார்ந்த நூலை கற்பிப்பதாக இவர்களது பெற்றோர் சம்மதத்துடன் சென்னை அழைத்து வரப்பட்டு, துன்புறுத்தியதும், தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி குழந்தைகளை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து உடல் முழுவதும் சிராய்ப்புகாயங்கள் இருந்த குழந்தைகள் உட்பட 12 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும், முதலுதவி அளிக்கப்பட்டும், இராயபுரம் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், மேற்குமண்டல இணை ஆணையாளர் திருமதி.எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்களின் துரித நடவடிக்கையின்பேரில், குழந்தைகள் நல அமைப்பினருடன் கலந்தாய்வு மேற்கொண்டு, மேற்படி 12 குழந்தைகளும் இன்று(18.12.2022), காலை பெரம்பூரிலிருந்து பீஹாருக்குசெல்லும் இரயிலில் சிறப்பு பெட்டி ஏற்பாடு செய்து, காவல்ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும்குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளுடன் மீட்கப்பட்ட12 குழந்தைகள் இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இக்குழந்தைகள் சட்டப்படி பீஹாரிலுள்ள குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர காவல் சார்பில் மேற்படி குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், தோல்பைகள், கைக்கடிகாரம், உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கி பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.