உங்கள் துறையில் முதலமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் காவலர்களிடம் மனுக்களை பெற்றார்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய உங்கள் துறையில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால் தலைமையில் நடைபெற்று மொத்தம் 2,692 மனுக்கள் பெறப்பட்டு அதில் 2,232மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 460 மனுக்கள் தொடர் நடவடிக்கைகளுக்காக பரிசீலனையில் உள்ளது. ************

இதன் தொடர்ச்சியாக 3வது கட்டமாக, உங்கள் துறையில்முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்’’ நேற்று (22.12.2022) முதல் சென்னை, எழும்பூர்,இராஜரத்தினம் விளையாட்டரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று (22.12.2022) நடைபெற்ற முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்ஆளிநர்களிடமிருந்து 257 மனுக்களை பெற்றார்.  

தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்ற இன்றைய (23.12.2022) காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அவர்கள் காலை முதல் இரவு 09.00 மணி வரையில்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து பணிஇடமாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல்,காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்துமருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 401மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்ககாவல் ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.  

கடந்த 2 நாட்கள் நடைபெற்ற காவலர் குறை தீரக்கும்முகாமில், காவல் ஆணையாளர் அவரகள் மொத்தம் 658மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டுதுரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இம்முகாமில், கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), இணைஆணையாளர்திருமதி.B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., (தலைமையிடம்), துணைஆணையாளர்கள் திரு.ராமமூரத்தி,(நிர்வாகம்), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), திரு.கோபால் (மோட்டார்வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்காவலர் குறை தீர்ப்பு முகாம் 3வது நாளாக நாளையும் (24.12.2022)தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.