சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில்உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் சாலையில்தவித்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும்மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடவும், அவர்களுக்குதேவையான சிகிச்சைகள் வழங்கி தங்குமிடங்களில் தங்கவைத்து பராமரித்திட மற்றும் அவர்களை குடும்பத்தோடுஇணைப்பதே குறிக்கோளாக கொண்டு, சென்னைபெருநகர காவல் கட்டுப்பாட்டறை உதவி மையம் மூலம், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள்ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட ‘‘காவல்கரங்கள்‘‘ என்ற புதிய திட்டத்தை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் அவர்கள் 21.04.2021 அன்று துவக்கிவைத்தார்.
கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டில் காவல் கரங்கள்அமைப்பினர் “கருணைப் பயணம்-1 மற்றும் 2“ மூலம்சென்னை பெருநகரில் ஆதரவின்றியும், மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் சுற்றித்திரிந்த 303வடமாநிலத்தவர்களை, தன்னார்வலர்களின் உதவியுடன்மீட்டு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும், தொண்டு நிறுவனங்களில் தங்க வைத்து பராமரித்தும், அவர்களது விவரங்களுடன், உதவி பொருட்கள் கொடுத்துஇரயில் மூலம் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொண்டுநிறுவனத்திடம் சேர்த்து, பின்னர் அவர்களது சொந்தஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதே போலராஜஸ்தான் மாநிலம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தென் மாநிலங்களைச்சேர்ந்த 90நபர்களை அழைத்து வந்து அவர்களின் உரிய முகவரியைகண்டறிந்து, 45 நபர்கள் குடும்பத்தாருடன் மீண்டும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை பெருநகரில்“காவல் கரங்கள்” திட்டத்தை சிறப்பாகசெயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களுக்குகடந்த 15.08.2022 அன்று நடந்த சுதந்திர தினவிழாவில்மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழக அரசின் “நல்ஆளுமை“ விருது வழங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று (09.01.2023) இரவுதமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப ஆகியோர் சென்ட்ரல் இரயில்நிலையத்தில் நடந்த “கருணைப் பயணம்-3” வழியனுப்பும்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,“காவல் கரங்கள்” மற்றும்தொண்டு
நிறுவனங்கள் மூலம் சமீபத்தில் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 160 (ஆண்கள்–122, பெண்கள்–38) நபர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி, 50 தன்னார்வலர்களுடன்தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இராஜஸ்தானுக்குஅனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து “த்ரைவ் டிஜிட்டல் ஹெல்த்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு.பாலசுப்ரமணியன், மற்றும் திரு.அரவிந்த் சீனிவாசன்(CFO) அவர்கள் மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரசிகிச்சை அளிக்கும் உபகரணங்கள் அடங்கிய ஆம்புலன்ஸ்வாகனத்தை எழும்பூரில் செயல்பட்டு வரும் காவல்மருத்துவமனை பயன்பாட்டிற்காக வழங்கினர். மேலும்“ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல் தலைவர்திரு.பிரிஜி கண்டேல்வால் மின்சாரத்தால் இயங்கும்ஆட்டோவை உணவு விநியோகம் செய்வதற்காக காவல்கரங்கள் அமைப்பிற்கு வழங்கினார். ரவுண்ட் டேபில்இந்தியா திரு.சந்தோஷ் அவர்கள் கருணைப்பயணம் செல்பவர்களின் பயணத்திற்கு உதவிகள் செய்தார்.
இது வரை சென்னை பெருநகர காவல் துறையின் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 3,788 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,905 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 467பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வைக்கப்பட்டும், 348பேர் மன மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டும், 68 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உரிமை கோரப்படாத1,744 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன்மீட்கப்பட்டு, உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்செய்தும், காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல்ஆணையாளர்கள் முனைவர் திரு.ஜெ.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர்திரு.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப. (தலைமையிடம்), துணைஆணையாளர் திரு.M.இராமமூர்த்தி, (நிர்வாகம்) காவல்அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனபிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.