சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நேற்று(08.02.2023) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முந்தைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட (NBW) சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகுற்றவாளிகள் மீது ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
அதன்பேரில், நேற்று (08.02.2023) காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது சிறப்புசோதனைகள் மேற்கொண்டு, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு நீதிமன்ற பிடியாணைபிறப்பிக்கப்பட்ட 5 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 13 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி, நீதிமன்ற ஆணை நிறைவேற்றப்பட்டது (Executed). மேலும், காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதையறிந்து, 6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 48 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டநீதிமன்றங்களில் சரணடைந்து (Recalled) வழக்குகளில் ஆஜராகினர்.
மேலும், சாலைகள் மற்றும் இரயில்வே பாதைகளில் உள்ள 30 நடை மேம்பாலங்கள் கண்காணிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள்தலைமையிலான காவல் குழுவினர், பள்ளி, கல்லூரிகளின் அருகிலுள்ள 83 பேருந்து நிறுத்தங்கள், 40 மற்றபேருந்து நிறுத்தங்கள், 14 இரயில் நிலையங்கள் மற்றும் 45 சந்தை பகுதிகள் என மொத்தம் 182 இடங்களில்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், காவல் உதவிசெயலி குறித்தும் அதனை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு, ஆபத்து மற்றும் அவசரநேரங்களில் சென்னை பெருநகர காவல்துறையை எளிதில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனதெரிவிக்கப்பட்டது.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளை ஒடுக்கவும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும், இது போன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.