சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணியில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி 2022-23 (66th All India Police Duty Meet 2022-23) கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை, மத்தியபிரதேசமாநிலம், போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், 1.அறிவியல் சார்ந்த புலனாய்வு (Scientific Aids to Investigation), 2.கணினி விழிப்புணர்வு (Computer Awareness, 3.புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு (Photo & Video), 4.நாசவேலை தடுப்பு சோதனை (Anti Sabotage check), 5.மோப்பநாய்களின் திறமை (Sniffer Dogs) ஆகி ிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

​​பல மாநிலங்களின் காவல்துறை குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தமிழக காவல்துறை அணி, 8 தங்க பதக்கங்கள், 1 வெள்ளி பதக்கம் மற்றும் 2 வெண்கலபதக்கங்கள் பெற்றதுடன், அறிவியல் சார்ந்த புலனாய்வுபிரிவில் முதல் பரிசுக்கான கேடயமும், புகைப்பட பிரிவில்முதல் பரிசுக்கான கேடயமும், நாசவேலை தடுப்புசோதனை பிரிவில் 2ம் பரிசுக்கான கேடயமும் பெற்றது. ஆக மொத்தம் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள்பெற்று புள்ளிகள் அடிப்படையில், தமிழக காவல்துறைஅணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான சார்மினார் கோப்பையை பெற்றது.

​​இதில் தமிழக காவல்துறை அணியில் கலந்து கொண்ட 1.M.ஆனந்த பெருமாள் (மு.நி.கா.44224), முதல்நிலைக் காவலர். மத்திய குற்றப்பிரிவு என்பவர் Police Portrait & Observation ஆகிய 2 பிரிவுகளிலும் 2 தங்கப்பதக்கங்களும், 2.V.விமல்குமார், உதவி ஆய்வாளர், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் என்பவர் அறிவியல்சார்ந்த புலனாய்வு (Scientific Aids to Investigation)பிரிவின் புகைப்படம் பிரிவில், 1 தங்கப்பதக்கமும், 3.C.முத்தேலு, பெண் காவல் ஆய்வாளர், நவீனகட்டுப்பாட்டறை என்பவர் நாசவேலை தடுப்பு சோதனை(Anti Sabotage check) பிரிவில் வெள்ளி பதக்கமும், 4. S.ஐயப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவுஎன்பவர் நாசவேலை தடுப்பு சோதனை (Anti Sabotage check) பிரிவின் வாகனங்கள் தேடுதல் பிரிவில் வெண்கலபதக்கமும் பெற்று, சென்னை பெருநகர காவல் சார்பாக 3 தங்க பதக்கங்கள், 1 வெள்ளி பதக்கம் மற்றும் 1 வெண்கலபதக்கம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

​​சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 66வது அனைத்துஇந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் தமிழக காவல்அணியில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்ற சென்னைபெருநகர காவலில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர்முத்தேலு, உதவி ஆய்வாளர் விமல்குமார், சிறப்பு உதவிஆய்வாளர் யப்பன் மற்றும் முதல்நிலைக் காவலர் ஆனந்தபெருமாள் ஆகியோரை இன்று (27.02.2023) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர் காவல்ஆணையாளர் அவர்கள் பதக்கங்கள் பெற்ற காவல்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.