1.இராயப்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை இரவு ரோந்து பணியிலிருந்த போலீசார்கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, பேகம் 3வது தெரு, எண்.13 என்றமுகவரியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தீப், வ/20, த/பெ.அப்ரித்லால் என்பவர் வசித்து வரும் இவர் தனது இருசக்கரவாகனத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார். சந்தீப் தனது நண்பர் தினேஷ் உடன் சேர்ந்து கடந்த 28.07.2021 அன்று இரவு 11.30 மணியளவில் ராயப்பேட்டை, பீட்டர்ஸ் ரோடு, சென்னை மாநகராட்சிஉருது மேல்நிலைப்பள்ளி அருகே டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் மேற்படி சந்தீப்பிடம் பணம் கேட்டுமிரட்டியுள்ளனர். சந்தீப் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே 3 நபர்களும் மேற்படி சந்தீப் மற்றும் அவரது நண்பர் தினேஷைதாக்கிவிட்டு, சந்தீப்பிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.1,500/- பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடனே சந்தீப் அருகில் ரோந்துவாகனத்தில் பணியிலிருந்த D-4 ஜாம்பஜார் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.ராஜாவிடம் (த.கா.31986) நடந்தசம்பவத்தை கூறியுள்ளார். தலைமைக்காவலர் ராஜா விரைந்துசெயல்பட்டு அருகில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படிசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட சசிகுமார், வ/19, த/பெ.வடிவேலு, எண்.15/2, கபூர் தெரு, இராயப்பேட்டை என்பவரை கைது செய்து E-2 ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மைலாப்பூர் சரகத்தில் இரவு ரோந்து பணியிலிருந்த மைலாப்பூர்சரக உதவி ஆணையாளர் திரு.கௌதமன் மற்றும் D-5 மெரினாகாவல்நிலைய தலைமைக்காவலர் G.விஸ்வநாதன் (த.கா.18506) E-5 பட்டினம்பாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்திரு.புருஷோத்தமன் (மு.நி.கா.44409) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் பிடிபட்ட சசிகுமாரிடம் விசாரணை செய்தனர். போலீசாரின்விசாரணையில் குற்றவாளி சசிகுமார் அளித்த தகவலின் பேரில் காவல் குழுவினர் சம்பவத்தன்று இரவே மேற்படி செல்போன் பறிப்புசம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான விக்கி (எ) விக்னேஷ், த/பெ.முருகன், எண்.7/4, சந்தாசாகிப் தெரு,இராயப்பேட்டை என்பவரையும் கைது செய்து E-2 ராயப்பேட்டைகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
2. ஐஸ் அவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4நபர்கள் கைது. 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/- பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கானநடவடிக்கை” (Drive Against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைபொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாககண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைசெய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். E-2 இராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்திரு.G.கண்ணதாசன், D-3 ஐஸ்ஹவுஸ்தலைமைக்காவலர் திரு.S.சதீஷ்குமார், (த.கா.26583) முதல் நிலைக்காவலர் திரு.C.அருண் ஆரோக்யராஜ் (மு.நி.கா.31742), இரண்டாம் நிலைக்காவலர்கள் திரு.L.மகாராஜா, (கா.எண்.50397) திரு.M.தமிழ்அரசன் (கா.எண்.50769) திரு.M.மகேஷ் (கா.எண்.50182) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இராயப்பேட்டை, பெசன்ட் ரோடு, வி.எம் தெரு சந்திப்புபகுதியில் கண்காணித்து, அங்கு உள்ள பெட்டிக்கடைக்கு குட்காபுகையிலைப்பொருட்களை சப்ளை செய்த 1.சாகுல் அமீது என்பவரைகைது செய்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில்சாகுல் அமீது அளித்த தகவலின் பேரில் 2.தங்கப்பாண்டியன், வ/44, த/பெ.அழகர்சாமி, எண்.30, எழில் நகர் 3.வெங்கடேஷ், வ/31, த/பெ.முத்துசாமி, எண்.13/5, ஜவஹர் உசேன் 5வது தெரு, இராயப்பேட்டை 4.நீதிமான், வ/33, த/பெ.தங்கராஜ், எண்.24 ஏ, மதுரை வீரன் தெரு, அம்பத்தூர் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும்ரூ.21,610/- பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதுமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டனர்.
3. மயிலாப்பூர் பகுதியில் 2 கொலைக் குற்றவாளிகளைதுரத்திச்சென்று பிடித்த காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு
சென்னை, மயிலாப்பூர், நொச்சி நகர், E பிளாக்கில் வசித்து வந்தசரவணன், வ/25, த/பெ.முருகேசன் என்பவர் கடந்த 01.8.2021 மதியம்சுமார் 02.30 மணியளவில், மயிலாப்பூர், லஸ், கெனால் பேங்க் ரோடு, மின்வாரிய அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்தபோது, டியோஇருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் சரவணனை கத்தியால் தாக்கிகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவயிடத்தின்அருகிலிருந்த D-5 மெரினா காவல் நிலைய தலைமைக்காவலர்திரு.G.விஸ்வநாதன், (த.கா.18506), J-2 அடையார் காவல்நிலையமுதல் நிலைக்காவலர் திரு.K.ரமேஷ்குமார் ஆகியோர் விரைந்துசெயல்பட்டு இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம்துரத்திச்சென்று வெங்கடேஷ் அக்ரஹாரம் தெரு, ஆர்.கே.மடம் தெருசந்திப்பில் 2 குற்றவாளிகளையும் கைது செய்து E-1 மைலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
E-1 மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.மணிகண்டன், வ/26, த/பெ.சுந்தரம், எண்.107, ஏகாம்பரம் பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை, 2.ஷாம் சிலம்பரசன், வ/20, த/பெ.தனசேகர், எண்.42, ஆறுமுகம் பிள்ளை தெரு, மயிலாப்பூர் என்பது தெரியவந்தது. மேலும்குற்றவாளி மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் மேற்படி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 3.அஜித்குமார், வ/24, த/பெ.முருகதாஸ், எண்.114, B பிளாக், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மயிலாப்பூர், 4.விஜய், வ/26, த/பெ.அறிவழகன், எண்.121, B பிளாக், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மயிலாப்பூர் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்துகுற்றச் செயலுக்கு பயன்படுத்திய 4 கத்திகள் மற்றும் டியோ இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இறந்துபோன சரவணன், அவரது தம்பி கார்த்திக்என்பவருடன் சேர்ந்து கடந்த 17.01.202 அன்று மணிகண்டனைகத்தியால் தாக்கியுள்ளதும், இந்த முன்விரோதம் காரணமாகமணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கத்தியால்தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
4.குமரன் நகர் பகுதியில் காணாமல் போன 82 வயதுமுதியவர் மீட்பு.
R-6 குமரன் நகர் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புஉதவி ஆய்வாளர் திரு.V.ராஜேந்திரன், கடந்த 19.07.2021 அன்று இரவு10.30 மணியளவில் அசோக்நகர், 11வது அவென்யூ அருகே ரோந்துபணியிலிருந்தபோது, அங்கு சுமார் 82 வயது மதிக்கத்தக்க முதியவர்வழி தெரியாமல் சாலையில் அங்கும் இங்கும் நடமாடிகொண்டிருந்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் V.ராஜேந்திரன்மேற்படி முதியவரை மீட்டு விசாரணை செய்த போது, அவர் சிறிதுமனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. முதியவருக்குஉணவு வாங்கி கொடுத்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்வசிக்கும் முதியவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் காணாமல் போனதாகதகவல் தெரிவித்து ரோந்து வாகன பொறுப்பு அதிகாரிகளிடம் அலெர்ட்செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் காணாமல் போனவரின்புகைப்படத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாட்ஸ்அப் மூலம்பெற்று சரிபார்த்த போது, மீட்கப்பட்ட முதியவர் தேனாம்பேட்டைபகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வ/82, என்பதை உறுதி செய்துமுதியவரை E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம்ஒப்படைத்துள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்விசாரணை செய்து முதியவர் கிருஷ்ணமூர்த்தியை அவரது மகனிடம்பத்திரமாக ஒப்படைத்தார். பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தமைலாப்பூர் சரக உதவி ஆணையாளர் திரு.D.கௌதமன் மற்றும் 12காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (03.08.2021) நேரில்அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்