கோயம்பேடு காவல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று போதை பொருட்கள் இல்லாததமிழ்நாடு என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், .கா. அவர்கள் உத்தரவின் பேரில்போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் Drive Against Drugs (DAD) உள்ளிட்ட பல்வேறுகுற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல்ஆணையாளர் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்குநேரில் சென்று காவல்துறை சார்பில் போதை எதிர்ப்பு குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வருகிற ஜுன் 26ம் நாள்சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள்ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடிகண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (18.06.2023) காலை போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுமினிமாரத்தான் ஓட்டம்கோயம்பேட்டில் தொடங்கி வானகரம் வரை நடைபெற்றது. வானகரம்  Wings Convention Centre- ல் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகுதிரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் சிலம்பாட்டம், பரதநாட்டியம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.K.கணபதி MLA, (மதுரவாயல், பிரபாகர ராஜா, MLA (விருகம்பாக்கம்) சென்னை  பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், .கா.,  இணை ஆணையாளர்கள் திரு.M.மனோகர், .கா. (மேற்கு மண்டலம்)  R.V.ரம்யபாரதி, .கா.., (வடக்கு மண்டலம்), கோயம்பேடு துணை ஆணையாளர் திரு.P.குமார், திரைப்பட இயக்குநர்திரு.வெற்றிமாறன், திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.