சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களதுநற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், .கா. அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களதுதலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில்சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்துஅவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்குதேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன்பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், .கா. அவர்கள் கடந்தஏப்ரல்-2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை-1, முதல் நிலைகாவலர் திரு.R.ஹரிபிரசாத், (மு.நி.கா.46590) என்பவரை இன்று (28.06.2023) நேரில் அழைத்துஏப்ரல் மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கிபாராட்டினார். உடன் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.J.லோகநாதன், .கா.., இருந்தார்.

           சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை-1ல் முதல் நிலைக் காவலராக பணிபுரியும்திரு.R.ஹரிபிரசாத் (மு.நி.கா.46590) என்பவர் கடந்த 31.03.2023 அன்று மதியம் 03.15 மணியளவில்அல்லிக்குளம், நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்தபோது அங்கு நீதிமன்றத்துக்கு வெளியே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த குற்றவாளிக்கு, ஒருவர் கஞ்சா கொடுத்தபோது, முதல்நிலை காவலர்ஹரிபிரசாத் பார்த்துவிட்டு அவரை பிடிக்க முயன்றபோது, தப்பியோடினார். முதல்நிலை காவலர்ஹரிபிரசாத் துரத்திச் சென்று குற்றவாளிக்கு கஞ்சா கொடுத்த எதிரி சதிஷ்குமார் () பில்லா, /23, /பெ.செல்வ விநாயகம், டி.பி சத்திரம், சென்னை என்பவரை பிடித்து, G-2 பெரியமேடு காவல் நிலையத்தில்ஒப்படைத்தார். G-2 பெரியமேடு காவல் நிலைய காவல் குழுவினர் விசாரணை செய்து, வழக்குப் பதிவுசெய்து, எதிரி சதிஷ்குமார் () பில்லா என்பவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.