சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாகபணிபுரிந்த C-4 ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர்திருமதி.ஜெயலஷ்மி, தலைமைக்காவலர் திரு.M.அமுதபாண்டியன், (த.கா.36287), காவலர்திரு.S.முத்துப்பாண்டி, (கா.52576), பெண்காவலர் திருமதி.S.லிசா, (பெ.கா.54341), ஆயுதப்படைகாவலர்கள் திரு.P.ஆனந்த் (கா.51521), திரு.M.ராமசாமி (கா.52427), D-1 திருவல்லிக்கேணி காவல்நிலைய ஆய்வாளர் திரு.S.மோகன்ராஜ், பெண்காவலர் திருமதி.S.அபிதாபேகம், E-2 இராயப்பேட்டைகாவல் நிலைய ஆய்வாளர் (தற்போது S-3 மீனம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர்) திருமதி.G.விஜயலஷ்மி,காவலர் திரு.M.புவனேசன் (கா.50863), V-3 ஜெ.ஜெ நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.T.ஜானகிராமன், தலைமைக்காவலர் திரு.V.சுப்பிரமணியன், (த.கா.20416), F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையகுற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.V.பிரகாசம், தலைமைக்காவலர்கள் திரு.S.தேவராஜ் (த.கா.26634), திரு.A.கோபிநாதன், (த.கா.51846), முதல்நிலைக் காவலர் திரு.S.ராஜ்குமார் (மு.நி.கா.31069), காவலர்திரு.K.பாண்டியன் (கா.42464), J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்திரு.S.கோவிந்தராஜன், தலைமைக்காவலர் திரு.K.அசோக்குமார் (த.கா.36237) என மொத்தம் 4 காவல்ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 13 காவல் ஆளிநர்கள் என 19 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களை இன்று (29.07.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
C-4 ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய காவல் குழுவினர் அரசு மருத்துவமனைகளில் வயதான பெண்களிடம் உதவி செய்வதாக கூறி கவனத்தை திசை திருப்பி தங்கநகைகள் திருடியது தொடர்பான 63 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், D-1 திருவல்லிக்கேணி காவல் குழுவினர் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைதண்டனை பெற்று தந்தும், E-2 இராயப்பேட்டை காவல் குழுவினர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம்செய்து கொலை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை பெற்று தந்தும், V-3 ஜெ.ஜெ நகர் காவல்குழுவினர் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை பெற்று தந்தும், F-3 நுங்கம்பாக்கம் காவல்குழுவினர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 குற்றவாளிகளை கைது செய்தும், J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினர் வாகன தணிக்கையின் போது, திருடுபோன 1 இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.