சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பெரியதீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்துவைத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், பல்வேறுஅரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுநிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்துசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில்நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் (District Level Crisis Management Committee Meeting) இன்று(23.08.2023) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள்தலைமையில் வேப்பேரி, சென்னை பெருநகர காவல்ஆணையாளர் அலுவலக வளாகம், 2வது தளத்தில் உள்ளகலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை பெருநகரகாவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைமாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை, கடலோர பதுகாப்பு குழுமம், சென்னை துறைமுகம், பொது சுகாதாரத்துறை, தெற்கு இரயில்வே துறை, தொலைதொடர்பு துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை,மின்சாரத்துறை, தேசிய பாதுகாப்பு படை, கடலோராபாதுகாப்பு படை, சென்னை பெருநகர குடிநீர் வாரியம், சென்னை போக்குவரத்து துறை, கமாண்டோ படைஉள்ளிட்ட 21 முக்கிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.