சென்னை பெருநகர காவல் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, சென்னை பெருநகர காவல் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் அதிகாரிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து கூடுதல்ஆலோசனைகள் வழங்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் மற்றும்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து, இன்று (31.08.2023) வேப்பேரி காவல்ஆணையரகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் போக்சோ சட்டம் குறித்து 1 நாள் பயிற்சி கருத்தரங்கம்நடைபெற்றது.

இப்பயிற்சி கருத்தரங்கத்தில், சென்னை பெருநகர காவல் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என சுமார் 60 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருமதி.குமாரி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ஜெயஸ்ரீ.கா., காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானகுற்றத்தடுப்பு பிரிவு (CWC), தமிழ்நாடு காவல்துறை, டாக்டர், கோ.வனிதா, துணைஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CWC), சென்னை பெருநகர காவல், திருமதி.மங்கையர்க்கரசி, மாவட்ட சமூக நல அதிகாரிதிருமதி.லதா, பாதுகாப்பு அதிகாரி, வடசென்னை, திருமதி கீதாலட்சுமி, அரசு மருத்துவஅதிகாரி, திருமதி.ஆதிலட்சுமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திரு.தனசேகர பாண்டியன்,இணை இயக்குநர், சமூக பாதுகாப்பு துறை, செல்வி.பூங்கொடி, மத்தியஒருங்கிணைப்பாளர், ஓன் ஸ்டாப் சென்டர் ஆகியோர் ப்பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டு போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்களை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாலியல் துன்பங்களால்பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் போது ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றைஎவ்வாறு திறம்பட கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

மேலும், பெண்கள் உதவி எண்.181, பெண்கள் காவல் உதவி எண்.1091, தமிழ்நாடுமாநில மகளிர் ஆணையம் எண்.044-28592750 குறித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.