மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில்காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைபெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க “பொதுமக்கள் மெகா குறைதீர்முகாம்” நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ராத்தோட், இ.கா.ப., அவர்கள்உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி இன்று (01.09.2023) வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணியளவில் சென்னை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ராத்தோர், இ.கா.ப., அவர்கள், அண்ணாநகர், நடுவங்கரை, அகர்வால்திருமண மண்டபத்தில் நடந்த “பொதுமக்கள் மெகா குறை தீர் முகாமில்” கலந்து கொண்டு பொதுமக்களைநேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று, அவற்றின் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதே போல, இன்று (01.09.2023) காலை 10.00 மணி முதல் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ளபூக்கடை காவல் மாவட்டத்தில் கொண்டித்தோப்பு காவலர் சமுதாய நலக்கூடத்திலும், வண்ணாரப்பேட்டைகாவல் மாவட்டத்தில் தண்டையார்பேட்டை சமுதாயநலக்கூடம், புது வண்ணாரப்பேட்டை சமுதாயநலக்கூடம், புது சூரங்குடி திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் குரு சந்திரா திருமணமண்டபத்திலும், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் நடுவங்கரை திருமண மண்டபத்திலும், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் K-5 பெரவள்ளூர் காவல் நிலைய வளாகத்திலும், கோயம்பேடு மாவட்டத்தில் சீதாலட்சுமி மண்பத்திலும், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையாளர்அலுவலகத்திலும், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில்வேப்பேரி லட்சுமிமஹாலிலும், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் எம்.ஆர்சி நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்திலும், அடையார் மாவட்டத்தில் J-2 அடையார்காவல் நிலைய வளாகத்திலும், துணை ஆணையாளர் அலுவலகத்திலும் தி.நகர் பர்கித் ரோட்டில் உள்ள ஶ்ரீஹால் திருமண மண்டபத்திலும், மற்றும் புனித தோமையர் மலை காவல் மாவட்டத்தில் ஆலந்தூரில் உள்ள JM ஹால் திருமண மண்டபத்திலும் என 12 காவல் மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் அந்தந்த காவல் மாவட்டதுணை ஆணையாளர்கள் தலைமையில் பொதுமக்கள் மெகா குறை தீர் முகாம் நடத்தப்பட்டு மனுக்கள்பெறப்பட்டது. குறைதீர் முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியும் தேநீர் மற்றும்ஸ்நக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இன்று (01.09.2023) நடைபெறும் பொதுமக்கள் மெகா குறை தீர்முகாமில் சுமார் 1000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 08.07.2023 அன்று நடந்த பொதுமக்கள் “மெகா குறை தீர் முகாமில்” சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் பொதுமக்களைநேரில் சந்தித்து 887 குறைதீர் மனுக்களை பெற்று இதில் 661 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டும் 14 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.