சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும்சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரிஅல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு ஒவ்வொரு மாதமும் “நட்சத்திரகாவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். நட்சத்திர காவலர்விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000/- பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன்பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.பஅவர்கள் கடந்த ஜுலை-2023 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.K.செந்தில்குமார், முதல்நிலைக் காவலர் (மு.நி.கா37225), J-8 நீலாங்கரை காவல் நிலையம்என்பவரை இன்று (02.09.2023) நேரில் அழைத்து ஜுலை மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டுசான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.
முதல்நிலைக் காவலர் செந்தில்குமார், R-6 குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் அயல்பணியில் பணிபுரிந்து வரும்போது, 14.07,2023 அன்று, J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வி.வி.கோயில் தெருவில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை இருசக்கரவாகனத்தில் சென்ற 2 நபர்கள் பறித்துச் சென்ற வழக்கில், குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் சென்ற சுமார்20 கி.மீ. தூரம் வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, பாலாஜி மற்றும் இளந்தளிர்ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்து, 5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யஅயராத பணிபுரிந்துள்ளார்.