சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று (20.09.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது. சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் திருமதி.கயல்விழி, இ.கா.ப, (தலைமையிடம்) துணை ஆணையாளர் திரு.S.S.மகேஷ்வரன் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) மற்றும்காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.