காவல் துறை  ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று (24.09.2023) மதியம் இராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ளவிநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறைஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர்திரு.ரஜத் சதூர்வேதி, .கா. அவர்கள் தலைமையில் சமத்துவ விநாயகர் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரும், காவல் அதிகாரிகள்மற்றும் பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

இதே போல, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் 3வது தெருவில் காவல் துறைஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமத்துவ பிள்ளையார்பூஜையில், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் திரு.R.சக்திவேல், தலைமையில், அனைத்து மதத்தினரும், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்