சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த  80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், .கா.. அவர்கள், F-2 எழும்பூர் காவல்நிலைய  ஆய்வாளர் திரு.திருமால், தலைமைக்காவலர் திரு.சதீஷ், முதல் நிலைக்காவலர்கள் திரு. பிரபாகரன், திரு.பாண்டியராஜன், காவலர் திரு.ராம்குமார், E-1  மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.ரவி, உதவிஆய்வாளர்கள் திரு.குமார், திரு.லோகநாதன், திரு.பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் திரு.அபிராமி, முதல்நிலைக்காவலர்கள் திரு.மாரிகண்ணு, திரு.பிரசாந்த், திரு.கதிரவன்,  H-6  R.K  நகர் காவல் நிலைய ஆய்வாளர்திரு.பூசைதுரை, K-10  கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன், முதல் நிலைக்காவலர்திருமதி.பாக்யலட்சுமி, E-5  பட்டினம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.A.ஜேசுராஜ், சிறப்பு உதவிஆய்வாளர் திரு.காசிராஜன்,  E-5  பட்டினம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  திரு.செந்தில்குமார்,முதல் நிலைகாவலர்கள் திரு.பாலசந்தர் திருமதி.ப்ரியா,                     B-3 கோட்டை போக்குவரத்து காவல்நிலைய  உதவி ஆய்வாளர் திரு.ஜெயபிரகாசம்,              T-4 மதுரவாயல்  போக்குவரத்து காவல் நிலையதலைமைக்காவலர் திரு.லெட்சுமணன்,  பாதுகாப்பு சென்னை காவல்  (SCP)   சிறப்பு உதவி ஆய்வாளர்திரு.முரளிதரன், முதல் நிலைக்காவலர் திரு.கோபி , K-1  செம்பியம்  காவல்  நிலைய  முதல் நிலைக்காவலர்கள்திரு.கலைவாணன், திரு.வினோத்குமார், F-5 சூளைமேடு காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு. ஜெகதீசன்

விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய  ஊர்காவல் படைவீரர் திரு.வடிவேல் முருகன் (HG 251)  மத்தியகுற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் சிறப்பாகபணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர்கள்திரு.புஷ்பராஜ், திரு.சிவகுமார், உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன், திருமதி.மஞ்சுளா, செல்வி.ராகவி, திரு.சிவராஜ், திரு.சந்திரசேகர்,  திரு.அருண், திரு.எமர்சன் விதலிஸ்,  திரு.தேவராஜ், திரு.சம்பத்குமார், செல்வி.திவ்யா, திரு.ரமேஷ், செல்வி.சரோஜினி, முதல் நிலைக்காவலர் திரு.இஸ்தலிங்கம், தலைமைக்காவலர்கள் திரு.விஜயகுமார், சந்திரமோகன், முதல் நிலைக்காவலர் திரு.இஸ்டலிங்கம், காவலர் செல்வி. புவனேஷ்வரி, மத்திய குற்றப்பிரிவு EDF-2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்துசிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு  கூடுதல் துணை ஆணையாளர் திரு.முத்துவேல் பாண்டி, உதவிஆணையாளர் திரு.P.ராஜசேகரன்  ஆய்வாளர்கள் திருமதி.ரேவதி, திரு.அப்ரஹாம் குரூஸ், திருமதி.சுமதி, திரு.பிரசிதா தீபா, உதவி ஆய்வாளர்கள் திரு.லோகேஸ்வரன், செல்லி.கீர்த்தனா, திரு.தாமஸ், திரு.பாரதி வேலு, திரு.கஜேந்திரன், திரு.ஶ்ரீதர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.தயாளன்,  திரு.சுமதி, திரு.அப்துல அமீது, தலைமைக் காவலர்கள் திரு.ஆனந்தன், திருமதி.வெங்கடேஷ்வரி, திருமதி.தெய்வாம்பிகை, திருமதி.கிரேஸ்செல்வராணி, முதல் நிலைக்காவலர் திரு.அறிவழகன், சிறப்பாக பணிபுரிந்த  Goondas Section கண்காணிப்பாளர் திரு.ஐயப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சியமளா, தலைமைக்காவலர்கள் திரு.பிரகாஷ், திரு.சரவணன், திருமதி.ரீட்டா, முதல் நிலைக்காவலர்கள் திரு.மோகன், திரு.தேவந்திரன், திருமதி.பார்வதி, திருமதி.சீதாலட்சுமி, திருமதி.சங்கீதா என 80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (14.10.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்

F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கு குற்றவாளியைகைது செய்தும், மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  தலைமையிலான காவல் குழுவினர்  டொக்கன்ராஜா   கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை பெற்று தந்தும், H-6  ஆர்.கே.நகர் காவல் நிலைய  ஆய்வாளர்  சரித்திரப்பதிவேடு குற்றவாளியைகைது செய்தும், K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலைவழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை பெற்று தந்தும், E-5 பட்டினம்பாக்கம் காவல்நிலையகாவல் குழுவினர் செல்போன் பறிப்பு குற்றவாளியை கைது செய்தும்,                                      E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவல் குழுவினர் , பயணி ஆட்டோவில் தவறவிட்ட போன கண்டுப்பித்துஉரிமையாளரிடம் ஒப்படைத்தும், B-3 கோட்டை போக்குரவத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாலஜாசாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்தும், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தியதற்காகவும், பாதுகாப்பு  சென்னைகாவல் பிரிவினர் (SCP) புழல் சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற குற்றவாளியை கைது செய்தும்,  K-1  செம்பியம் காவல் நிலைய காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைகைது செய்தும்,                            F-5 சூளைமேடு காவல்  நிலைய குழுவினர்  கொலை வழக்கில் சம்பந்தப்பட்டகுற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை பெற்று தந்தும்,  விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் வழிப்பறிவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரல் ரேகை மூலம் கைது செய்ய உதவியும், H-6 ஆர்.கே.நகர் காவல்நிலைய ஊர்காவல் படை வீரர்  செயின் பறிப்பு குற்றவாளியை கைது செய்தும்,  மத்தியகுற்றப்பிரிவு  வங்கிமோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் வங்கிமோசடி தொடர்பான குற்றவாளிகளை கைது செய்தும்,  மத்தியகுற்றப்பிரிவு EDF-2 காவல் குழுவினர் EDF வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.  

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள்,  சிறப்பாகபணிபுரிந்த D-7  எம்.ஜி.ஆர் அண்ணா நினைவிடம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரேணுகாதேவிஎன்பவருக்கு இன்று (14.10.2023) ஆகஸ்ட்  மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது (Police Star for the month of August-2023) மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். இவர் வடபழனி அனைத்து மகளிர்காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனைமற்றும் ரூ.61,000/- அபராதம்  பெற்று தந்து சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.    

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.ஆர்.சுதாகர், .கா.., (போக்குவரத்து), திரு.அஸ்ராகார்க், .கா.., (வடக்கு), முனைவர் திருமதி.செந்தில்குமாரி .கா. (மத்தியகுற்றப்பிரிவு) காவல் இணைஆணையாளர் (தலைமையிடம்) திருமதி..கயல்விழி, .கா..,  துணை ஆணையாளர் திருமதி.N.S.நிஷா, .கா. மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.