வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, (03.12.2023) இரவு முதல், சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள்மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,000 காவல் அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரணபணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
துணை ஆணையர்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனம் ஆகியோர்கள் தலைமையில் மூன்றுதனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சென்னைபெருநகர காவல் எல்லையில் உள்ள காவலர்குடியிருப்புகள் மற்றும் இதர காவல்துறை கட்டிடங்களை பார்வையிட்டு, அவர்களுக்கு வேண்டியதேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மட்டுமல்லாது, அங்கு தேங்கியுள்ள மழை நீரைஅப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., (05.12.2023) மாலை எழும்பூர், நரியங்காடு காவலர் குடியிருப்பிற்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரணபணிகளை பார்வையிட்டார். பின்னர், அங்கு மீட்புப் படகில் சென்று காவலர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும், தேவையான உதவிகளை செய்யுமாறு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, துணை ஆணையாளர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப (திருவல்லிக்கேணி) திரு. ஜெயகரண் (ஆயுதப்படை) மற்றும் காவல்உ அதிகாரிகள் உடனிருந்தனர்.