சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ.5 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணியாளர்) பணிபுரிந்துவந்த திரு,பி.ஜலால் போஸ்  உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று இறந்தார். இறந்துபோன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்சங்கத்தின் சார்பில் ரூ.5,00,000/- நிதி திரட்டினர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.. (22.12.2023) காவல் ஆணையரகத்தில், இறந்துபோன கண்காணிப்பாளர் தெய்வத்திரு.ஜலால் போஸ் அவர்களின் மனைவி  குடும்பத்தாரிடம் மேற்படி ரூ.5,00,000/- பணத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் .சென்னகேசவன், மாநில பொதுச் செயலாளர் பெ.சத்தியேந்திரன், மாநில துணைத்தலைவர் ஜெ.சுப்புராயலு, மாநில நிர்வாகிகள் மற்றும் சென்னை பெருநகர அலுவலக கிளை சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.