சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., V-7 நொளம்பூர் காவல் நிலைய எல்லையில், ஜெகன்என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டஎதிரிகளை கைது செய்த திருமங்கலம் சரக உதவிஆணையாளர் தலைமையிலான காவல் அதிகாரிகள்மற்றும் காவல் ஆளிநர்களை இன்று (27.12.2023) நேரில்அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, நொளம்பூர், டாக்டர் குருசாமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜெகன், வ/49, த/பெ.திருநாவுக்கரசு என்பவர் முகப்பேர், ரெட்டிப்பாளையத்தில் மீன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 05.09.2023 அன்று ஜெகன் மேற்படி மீன் கடையில்இருந்தபோது, அங்கு வந்த நபர்கள் ஜெகனை கத்தியால்தாக்கி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றன. இது குறித்து ஜெகனின் மனைவி கல்பனாகொடுத்த புகாரின்பேரில் V-7 நொளம்பூர் காவல்நிலையத்தில் கொலை உள்ளிட்ட பிரிவுகளில்வழக்குப்பதிவு செய்து விசாரண ேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய, திருமங்கலம் சரக உதவிஆணையாளர்  B.வரதராஜன் மேற்பார்வையில், V-7 நொளம்பூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு காவல்ஆய்வாளர் திரு.ஜார்ஜ் பொன் மில்லர், குற்றப்பிரிவுஆய்வாளர் திரு.விஜயகாந்த் (தற்போது M-3 புழல்கா.நி.,), V-5 திருமங்கலம் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் சூரியலிங்கம், ஆகியோர்தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.மனோஜ்குமார்,திரு.கல்வியரசன், திரு.ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்திரு.ரவி, தலைமைக் காவலர்கள் திரு.ராஜகோபால்(த.கா.35796), திரு.சரவணன் (த.கா.26613), முதல்நிலைக் காவலர்கள் வினோத்குமார், (மு.நி.கா.43249), சந்தான மகாலிங்கம் (மு.நி.கா.40505), பரத் (மு.நி.கா.51519), பவுன்ராஜ் (மு.நி.கா.31282), பீக்அகமது (மு.நி.கா.44619), ரவிச்சந்திரன் (மு.நி.கா.46085) மற்றும் அக்னிராஜ் (மு.நி.கா.58023) ஆகியோர் அடங்கியதனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணையில், 2015ம் ஆண்டு, திருவாரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவின்போது, ஜெகன் தரப்பினருக்கும், மந்திரமூர்த்தி தரப்பினருக்கும்ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த முன்விரோதம்காரணத்தால், மந்திரமூர்த்தி தரப்பினர் ஜெகனைகொலை செய்தது தெரியவந்தது.

தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிரவிசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படிகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.சக்கரை (எ) சுதாகர், வ/26, த/பெ.உலகநாதன், முத்துப்பேட்டைதாலுகா, திருவாரூர் மாவட்டம் 2.மகேஷ், வ/39, த/பெ.ராஜேந்திரன், முத்துப்பேட்டை தாலுக்கா, திருவாரூர்மாவட்டம், 3.மந்திரமூர்த்தி, வ/25, த/பெ.கைலாசம், , முத்துப்பேட்டை தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், 4.சீனிவாசன் (எ) சீனி, வ/25, த/பெ.ஜெயராமன், கண்டீஸ்வரர் கோயில் தெரு, காஞ்சிபுரம் மாவட்டம்,5.நிர்மல்குமார் (எ) நிர்மல், வ/29, த/பெ.ராஜ், பி.வி.காலனி, வியாசர்பாடி, சென்னை ஆகிய 5 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து குற்றசம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் மற்றும் 2 கத்திகள்பறிமுதல் செய்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான மாரி (எ) ஆழிக்குடிமாரி என்பவரை பிடிக்க, தனிப்படைகள், ஆந்திரமாநிலம் சென்று தீவிர விசாரணை செய்ததில், எதிரி மாரிஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படை காவல் குழுவினர் ஒடிசாமாநிலம் சென்று ஒடிசா மாநில காவல்துறைஒத்துழைப்புடன் ஒடிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், சுன்னம்கோய் கிராமத்தில் உள்ள மலை உச்சியில்பதுங்கியிருந்த மாரி (எ) மாரிமுத்து (எ) ஆலிக்குடி மாரி,வ/37, த/பெ.சங்கரவேலு தேவர், பாரதியார் தெரு, ஆலிக்குடி, ஶ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்என்பவரை நேற்று (26.12.2023) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.