சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் பட்டாபிராமன், ஆ/வ.66, த/பெ.ராமசுப்பரமணியன் என்பவரிடம் மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவிமேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், பட்டாபிராமன் மேற்படி மாறனுக்கு ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் என மொத்தம் சுமார் ரூ.2 கோடி பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் மாறன் கூறியதுபோலவேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டதால், பட்டாபிராமன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளிக்க புகாரின் மீது மத்தியகுற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து, விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் B தனலட்சுமி தலைமையிலான காவல் குழுவினர் புலன் விசாரணையில், எதிரி மாறன் என்பவர் பட்டாபிராமனிடம் அவரது மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 2016ம் ஆண்டு முதல் 2022ம்ஆண்டு வரை சிறு சிறு தவணைகளாக ரொக்கமாகவும், வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் என மொத்தம் சுமார் ரூ.2 கோடி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி C.M.மாறன், ஆ/வ 45, த/பெ மாணிக்கம், காவேரி வீதி, 4வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் ஐயர் பங்களா, மதுரை என்பவரைநேற்று (05.01.2023) கைது செய்தனர்.
விசாரணையில் எதிரி மாறன் தனியார் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி மாறன் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.012023) நீதிமன்றக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். சிறப்பான முறையில் புலனாய்வு செய்து எதிரியை கைது செய்த காவல் ஆய்வாளர் B.தனலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சரோஜினி. கிருஷ்ணமூர்த்தி, முதல்நிலை காவலர் கர்ணன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுவாகப் பாராட்டினார், மேலும் பொதுமக்கள் யாரும் இதுபோன்று அரசுதுறை மற்றும் தனியார் துறையில் வேலை வாங்கி தருவதாககூறுபவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகா காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.