தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், .கா.., அவரது மனைவி  மம்தா ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா., அவரதுமனைவி ஷில்பம் கபூர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில், சென்னைபெருநகர காவல், ஆயுதப்படை-2 சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆயுதப்படை காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை சார்பில் அமைத்துள்ள மூலிகைதோட்டத்தை பார்த்து பாராட்டினர். பின்னர் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, காவல்அதிகாரிகள், ஆளிநர்கள், அவரது குடும்பத்தினருக்கான ரங்கோலி (கோலப்போட்டி), கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து கண்டு ரசித்தனர்.  

மேலும், காவல் ஆளிநர்களின் ஆயுத கவாத்து மற்றும் சாகசங்களையும், பரதநாட்டியம், சிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு கோப்பைகள், பரிசுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவுபரிசுகளை வழங்கினர்.இறுதியாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னைபெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல்குடும்பத்தினருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள்  பிரேம் ஆனந்த் சின்ஹா, .கா.., (தெற்கு), முனைவர்

P.K.செந்தில்குமாரி .கா. (மத்தியகுற்றப்பிரிவு) காவல் இணை ஆணையாளர்கள்  M.R.சிபிசக்ரவர்த்தி, .கா.., (தெற்கு மண்டலம்), A.கயல்விழி, .கா.., (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள்மருத்துவர் M.சுதாகர் (புனித தோமையர்மலை), I.ஜெயகரன் (ஆயுதப்படை-1), திரு.S.அன்வர் பாஷா(ஆயுதப்படை-2), M.ராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும்காவலர் குடும்பத்தினர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.