காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர் ஜிவால், .கா..,(24.01.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா., முன்னிலையில், சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS), பருந்து மற்றும் நிவாரணம்ஆகிய 3 செயலிகளின் இயக்கத்தையும், பொதுமக்கள் மற்றும்மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளபந்தம் என்ற புதிய திட்டத்தையும்துவக்கி வைத்தார்.