சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் போது காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவுதல், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் போன்றபணிகளில் ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பக்கபலமாக பணியாற்றி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேலிடதலைமையில், ஊர்க்காவல் படை உதவி பொது தளபதி (Assistant Commandant General) தலைமையில், ஊர்க்காவல் படையின் வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டல தளபதிகள் (Area Commanders/ North, East, South zones) மேற்பார்வையில், ஊர்க்காவல் படை அதிகாரிகள் தலைமையின் கீழ் 2,329 ஊர்க்காவல் படையினர்(Home Guards) (ஆண்கள்-2054, பெண்கள்-275) சென்னை பெருநர காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த தெற்கு மண்டல பகுதி தளபதியாக (Area Commander/South zone) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.வித்யா சத்யநாராயணன் அவர்கள் இன்று (12.04.2024) சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்களை காவல் ஆணையரகத்தில்மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
திருமதி.வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல், ஊர்க்காவல் படையில் பகுதி தளபதியாகதேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆவார்.