தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா மாநிலம், என்பவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் ஈச்சர் மினி லாரி கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக கூறியதை தொடரந்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இது சம்மந்தமாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.​மேற்படி, வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபரக்ளையும் சம்மந்தப்பட்;ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஐர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  ​மேலும், இவ்விதமான போதை பொருள் வர்த்தகத்தை தடுக்கம் முயற்சியில் தாம்பரம் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கையானது தாம்பரம் காவல் நகரத்தை பாதுக்காப்பாக வைத்திருக்கவும், போதைப்பொருள் பிடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியை சிறப்பாக மேற்க்கொள்வதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.