சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்துக் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நிலையான அடிப்படையில் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று உண்மையை அறிந்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையானது நேற்று (22.07.2023) நகரின் 3 முக்கிய இடங்களில் அதாவது ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா ரோட்டரி & ஈகா சந்திப்பு ஆகிய இடங்களில் 100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 50 போக்குவரத்து வார்டன்களுடன் சாலைப் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு சம்மந்தமாக சிறப்புபிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.

இவ்விழிப்புணர்வின் வாயிலாக தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் பயன்படுத்துவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, மது போதையில் வாகனம் ஓட்டுவது தவிர்ப்பது,இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்வதை தவிர்த்தல் மற்றும் போக்குவரத்துநிறுத்தற் கோட்டினை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (வடக்கு)திரு.P.சரவணன், இ.கா.ப அவர்கள் ஸ்பென்சர் சந்திப்பில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும்போக்குவரத்து வார்டன்களுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினார். மேலும் சென்னைபெருநகர போக்குவரத்து காவல்துறையினருடன் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும்திருநங்கைகள் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.