தமிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு அதன் அங்கமாக சென்னை மாநகர காவல்துறையில் 03.06.2019 அன்று இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் அவர்களின் நேரடி கண்காணிப்பில் ஒரு காவல் துணை ஆணையாளர் அவர்களின் கீழ் செவ்வனே செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோய் கிருமியான கொரோனோ வைரஸ் தொற்று நோய் பற்றி மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் இச்சூழலை எதிர்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நிகழ்ச்சிகளை இரவு பகல் பாராமல் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர காவல் சார்பாக இந்த கொடிய நோயினை விரட்டும் பொருட்டு கண் துஞ்சாமல் பணியாற்றும் சென்னை மாநகர காவல்துறையினரை குறிப்பாக பெண்காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனோ விழிப்புணர்வு கீதம் என்ற தலைப்பில் குறும்படத்தை வெளியிட்டார். இக்குறும்படத்தினை சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.காவிசுவநாதன் இ.கா.ப அவர்களின் ஆலோசனையின் பேரில் காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அவர்களின் மேற்பார்வையில் வெளியிடப்பட்டது.