கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,64,500 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று 80 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 16,781ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 16,865 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,08,969 ஆக உயர்ந்துள்ளது. 4,55,078 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 20,624 பேருக்கு கரோனா
