வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும்.

வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் இதை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.  பயிரிட்டு முதிர்ந்த நிலையிலுள்ள வெங்காயத்தை எடுக்க கூட வாய்ப்பில்லை. வெங்காயத்தை எடுத்து விற்பனை செய்தால் ஒரு கிலோ ரூபாய் ஐந்துக்கு விலை போவதால் கூலிக்கு கூட கிடைக்காது. பின்னால் விலை உயரும் என நினைத்து இவைகளை எடுத்து வைக்கவும் முடியாது. ஏனெனில் இது வீரிய விதைகளைகொண்டு விவசாயிகள் விளைவித்ததால் சிலநாட்களிலேயே அழுகி சறுகாகிவிடும். இதனால் வெங்காயம் சாகுபடி செய்த பெரம்பலூர்; திண்டுக்கல்; நாமக்கல்; திருப்பூர் மற்றும் சில மாவட்டங்களின் விவசாயிகள் அரசின் உதவி கேட்டு போராடி வருகின்றனர். உணவுக்கு சுவையையும் உடலுக்கு ஊட்டத்தையும் கொடுக்க கூடிய வெங்காயத்தை மீண்டும் பயிரிட விவசாயிகளுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும். குறைந்தபட்ச விலையாக கிலோ ரூபாய் 30 என அரசு நிர்ணயம் செய்து  தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து பொது வினியோக அங்காடிகள் மூலம் இவைகளை விற்பனை செய்திட அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இதுவரை இந்த சாகுபடியில் இழப்பை சந்தித்து உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 23 அன்று மேற்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழக அரசுக்கு இக் கோரிக்கை மனுக்களை மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கொடுப்பார்கள்.