பாஜக ஒன்றிய அரசு எவ்வித முன்யோசனையும் இல்லாமல் கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதிபுழக்கத்தில் இருந்த ரூ.500/-, ரூ.1000/- மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என அறிவித்து – புதிதாகரூ.500/- மற்றும் ரூ.2000/- மதிப்புள்ள பணத்தாள்களை வெளியிட்டது. இதன்மூலம் கறுப்புப்பணம்ஒழிக்கப்படும், கள்ளப்பணம் அழிக்கப்படும் என்று வாய்ச்சவடால் அடித்தது. ஆனால் நடைமுறையில்எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் ரூ.2000/- மதிப்பு பணத்தாள்கள் வரும் செப்டம்பர் 30 வரைமட்டுமே செல்லும், அக்டோபர் முதல் தேதியிலிருந்து செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000/- மதிப்புள்ள பணத்தாள்கள் 2018 மார்ச் 31 நிலவரப்படி ரூ.6.73 லட்சம் கோடி பழக்கத்தில் இருந்தது. அதில் தற்போது 3.62 லட்சம் கோடி மதிப்புள்ள பணத்தாள்கள்மட்டுமே புழக்கத்தில் உள்ளன. சுமார் 50 சதவிகித 2000 ரூபாய் பணத்தாள்கள் கட்டு கட்டுக்களாக மாறிபல இடங்களில் பதுங்கி கிடக்கின்றன. அந்த பெரும் பணம் புழக்கத்துக்கு வராமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 2000 மதிப்புள்ள பணத்தாள்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
உயர்மதிப்பு பணநீக்க நடவடிக்கையில் பாஜக ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்திருப்பதற்கு ரூ.2000/- மதிப்பு பணம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்திருக்கிறது. ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன்பு அதன் சாதக பாதக அம்சங்களையும், பார தூர விளைவுகளையும் பரிசீலித்து சமூக பொறுப்புணர்வுடன் அணுகும் ஜனநாயக நெறியில் நம்பிக்கையற்ற பாஜக அரசுதொடர்வதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு அதனை ஆட்சிஅதிகாரத்திலிருந்து அகற்றுவதில் பொது மக்களும் ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும் எனஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.