திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். இதனால் அவர் மூலம் ஜோதிமுருகன் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர், ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஜோதிமுருகன் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர் .