உளவுத் தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து கீழ்க்காணும் நபர்களை பரிசோதனை செய்தனர்:
• பாங்காக்கிலிருந்து வந்த இந்திய ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த 474 கிராம் எடையுள்ள 9 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
• துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணிகள் இருவரை சோதனை செய்தபோது, அவர்கள் நூதனமுறையில் மறைத்து எடுத்து வந்த 1370 கிராம் எடையுள்ள 9 தங்க பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
• கொழும்பிலிருந்து வந்த இந்திய பெண் பயணிகள் இருவரை சோதனை செய்த போது, அவர்களின் கைப்பைகளிலிருந்து வெள்ளி முலாம் பூசப்பட்ட 730 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணிகள் இருவரை சோதனை செய்தபோது தங்களின் ஆடைகள் வைக்கும் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்த 680 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறையின் முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலிவெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.