முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி.

வருகின்ற 30ந் தேதி அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். ஐயா தேவர்ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகுஎடப்பாடியார் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மாலை சூட்டப்படவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறைஅனுமதியும், உரிய பாதுகாப்பும் அளிக்குமாறு காவல்துறை ஆணையரிடத்திலே கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: நந்தனத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது பற்றி

பதில்: கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. ஆகவே  இந்த விஷயத்தில்உள்நோக்கம் எதுவும் கற்பிக்கக் கூடாது.

கேள்வி: கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து?

பதில்: மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதனை பார்க்க வேண்டும். இதுசம்பவம் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறக்காமல் உள்ளார். தீபாவளிக்கு முன்பு இந்த சம்பவம்நடந்திருக்கிறது. மேலும் மிகப்பெரிய அசம்பாவிதம் எதாவது நடத்த திட்டமிட்டிருக்கலாம். நல்ல வேளையாகதீபாவளி நாளில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில்தற்போதுதான் கூட்டம் நடத்தவிருப்பதாக கேள்விபடுகிறேன்.

இதற்கு முன்பு கோயம்புத்தூரில் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தன. அப்போது 58 உயிர்கள்பலியாயின. இச்சம்பவம் நாட்டையை உலுக்கியது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம்வேதனை அளிக்கிறது. தீபாவளி முடிந்து இத்தனைநாள் கழித்து இன்றைக்குத்தான் இந்த குண்டு வெடிப்புகுறித்து  கூட்டம் நடத்துகிறார்கள்.  இத்தனை நாள் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்?

இது சம்மந்தமாக காவல்துறையினர் 75 கிலோ வெடி மருந்தினை கைப்பற்றியிருக்கிறார்கள். முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியாக இன்றைக்கு இதுஇருக்கிறது.

கேள்வி: .பி.எஸ். குறித்து

பதில்: கிளைக்  கழகம் தொடங்கி அனைத்து நிர்வாகிகளும் கட்டுக்கோப்பாக அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில்  செயல்படுகிறார்கள். கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரறிஞர் அண்ணாபிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கழகத்தின் 51 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி என அனைத்துநிகழ்ச்சிகளும் தொடர்ந்து எழுச்சியோடு கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. .பி.எஸ். என்ன செய்தார்?  தற்போதுதான் இந்த குண்டு வெடிப்பு சம்மந்தமாக ஒரு கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.  இது   ஏதோ ஒரு வலையிக்குள் இருந்துகொண்டு எட்டிப்பார்த்து கண்டனம் தெரிவித்துவிட்டு மீண்டும் அந்தவலைக்குள் ஓடி ஒளிந்துக்கொள்வதுபோல்தான் இருக்கிறது .பி.எஸ். நடவடிக்கை.

கேள்வி: சசிலா குறித்து தீபா ஆடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: ஓய்வு பெற்ற நீதியரசர் தெளிவாக தெரிவித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர்விஜயபாஸ்கரும் இதில் எனது பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சசிகலாவும், .பி.எஸ். ஆகியோர்தான் பொறுப்பெடுத்திருந்தார்கள். முதலமைச்சரின் அனைத்து விவகாரங்களிலும் .பி.எஸ்.தான் பார்த்துக்கொண்டிருந்தார். இவங்க இரண்டு பேரும்தான் குற்றம் செய்தவர்கள்  என்ற அடிப்படையில்தான்ஆறுமுகசாமி கமிஷன் முடிவு இருக்கிறது. இந்த முடிவின் அடிப்படையில்தான் தமிழக அரசு நடவடிக்கைஎடுப்பது இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

அம்மா அவர்கள்  உலகம் போற்றும் தலைவர். புகழ் பெற்ற தலைவர். இப்படிப்பட்ட தலைவருக்கே இந்த நிலைஏற்பட்டது என்று  தமிழக மக்கள் அனைவரும் வேதனைபடுகிறார்கள்.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு

என்று திருக்குறளில் கூறப்படுகிறது. அதாவது வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடையயானையையும், கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகள் கூட அதைக் கொன்றுவிடும்.

கேள்வி: மழை நீர் கால்வாயில் விழுந்து மரணமடைந்த பத்திரிகையாளர் குறித்து?

பதில்: உயிரை பணையம் வைத்து, கொட்டும் மழையில், இரவு பகல் பார்க்காமல் நாட்டு மக்களுக்கு செய்திஅளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகத்தினர் உழைக்கின்றனர். அவர்களுக்கே ஒரு பாதுகாப்பு இல்லைஎன்றால் வேதனை அளிக்கிறது. பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருக்கவேண்டும். அதேபோல் இதுபோன்ற இடங்களில் காவலர்களை பாதுகாப்பிற்கு வைத்திருக்க வேண்டும். ஆனால்எதுவுமே இல்லாமல் கால்வாய்கள் திறந்தவாறு இருந்தால் எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? இந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இந்த பணியின் காண்ட்ராக்டர் யார்? அவர்கள் மீதுநடவடிக்கை எடுத்தார்களா? மேலும் இந்த பணியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யார்? யார்? என்பதனைகண்டறிந்து நடவடிக்கை எடுத்தியிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டால் என்ன நியாயம்? உதாரணத்திற்கு எதாவது ஒரு விபத்து சம்மந்தமாகநீதிமன்றத்தில் வழக்கு வந்தால் உடனே நீதிபதிவிபத்தில் பாதிக்கப்பட்டவர் எவ்வளவு சம்பவம் வாங்கினார்? அந்த நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருப்பார்? என்ற கணக்கின் அடிப்படையில்தானே ரூபாய்30 லட்சம் 40 லட்சம் வழங்க வேண்டும்என்ற தீர்ப்பு சொல்வார்கள்-. இதுதான் விபத்து சம்மந்தமானவழக்ககளில் நடக்கிறது. அந்த அடிப்படையில்தான் விபத்தில் மரணமடைந்த அந்த தனியார்தொலைக்காட்சியை சேர்ந்தவர் எவ்வளவு சம்பவம் வாங்கினார். அவருடைய பணிக்காலம் வரை எவ்வளவுசம்பளம் வாங்குவார்-. எத்தனை ஆண்டுகள் இருப்பார் என்பதனை கணக்கிட வேண்டும் என்பதெல்லாம்இருக்கிறது அல்லவா? ஆனால் உங்களுடைய தவறால் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தால் என்னநியாயம்? இந்த பணம் அந்த குடும்பத்திற்கு ஈடாகுமா? அரசு பணி எதாவது ஒன்றை தரலாமே? ஆனால்இதற்கெல்லாம் வாய் திறக்கவில¢லை. எனவே ஊடகத்தினருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும்சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஒரு அவலநிலைதான் நடக்கிறது.

கேள்வி: ஆந்திராவில் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களே?

பதில்: எதற்குத்தான் இந்த அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது? ஆந்திராவில் சட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள்கொடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஏதாவது ஒரு கடிதம் அந்த அரசாங்கத்திற்கு எழுதியிருக்கலாமே? ஆனால் அப்படி கடிதம் எதுவும் எழுதாமல் வாய் மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவங்களைப்பொறுத்தவரையாரை பற்றியும் கவலைப்படமாட்டார்கள். அதே சமயம் தமிழ்.. தமிழ்.. என்று சொல்வார்களே தவிர தமிழர்கள்தாக்கப்படும்போது சரி, தமிழ்நாட்டு மக்கள் தாக்கப்படும்போது சரி, தமிழர்களின் உரிமைகள்பறிக்கப்படும்போதும் சரி, தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும்போதும் சரி, இப்படிஎந்த நிலையிலும் வாய் திறக்காமல் இருக்கின்ற ஒரே அரசாங்கம் அது திராவிட முன்னேற்றக் கழகஅரசாங்கம்தான்இவ்வாறு தெரிவித்தார்.