ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் 11 மாவட்டங்களில் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல வேண்டும் என இன்றைய தினம் ஆர்வத்தோடு தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள்மத்தியில் பொதுமக்களும் வரவேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தின் படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு வசதி சுகாதார வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம்செய்து தரவேண்டும் என்ற வகையிலும் இந்த கூட்டம் இன்றைக்கு நடைபெற்றது.
வாகனங்கள் மட்டுமே 40 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்வது வாகனங்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்வதுகுறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக,
நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்பது உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து மத்தியஅரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
அதிமுக பாஜக இடையிடயே அடிக்கடி ஏற்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,
அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல ஏற்கனவே இதுபோன்ற விமர்சனங்க விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு. செல்லூர் ராஜாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் யாராயிருந்தாலும் விமர்சனம் செய்வதேநாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக்கூடியசூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமைக்கு அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கைஉள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது.