தோசை அரசனுக்கு எதிரான ஜீவஜோதியின் போர் !

இந்திய சினிமாவில், பல வித்தியாசமான களங்களில் முன்னோடி படங்களான Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும்  Raazi, போன்ற தீவிரமான படைப்புகளை தந்த Junglee Pictures நிறுவனம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு அற்புதமான  படைப்பை வழங்கவுள்ளது. Junglee Pictures  நிறுவனம் திருமதி ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது. தமிழகத்தில் தொடர்  உணவக நிறுவனங்களை நிறுவி, கொடி கட்டி பறந்த P.ராஜகோபால் V.   மீது தேசமே அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களை சுமத்திய,  ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து  ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து, வானளவு புகழுக்கு  உயர்ந்த தொழிலதிபர், உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.  உலகம் முழுக்க 28 நாடுகளில் 100 உணவங்களை திறந்து,  இந்தியாவின் மிகப்பெரும் தொடர் உணவகங்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவரின் வாழ்க்கை பக்கங்களை தொட்டு செல்லும். அவர் தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர், பலருக்கு ஆதர்ஷமாக இருந்தவர். அவரது உழியர்கள் மட்டுமல்லாது பொது மக்களாலும் கொண்டாடப்பட்டவர். தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு  சேர்த்தவர். அப்படிபட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும்  அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்த  குற்றத்தில் சிக்கியதும்,  அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டதுமான நாட்டை உலுக்கிய இந்த சம்பவங்கள், உண்மையான ஆதார பின்னணியில் இப்படத்தில் இடம்பெறவுள்ளது. தனது வாழ்க்கை கதையை உலகிற்கு சொல்ல விளைந்த திருமதி ஜீவஜோதி சாந்தகுமார் அவர்களுடன் உரையாடியபோது அவர் பகிர்துகொண்டதாவது.. எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உண்ர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள்  நடந்த போரை,   Junglee Pictures திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது. எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின்  முகத்தை,  நான் அனுபவைத்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்றார். Junglee Pictures நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் அவர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற “Raazi” படத்திற்கு பிறகு Junglee Pictures  அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படம் குறித்து பவானி ஐயர் கூறியதாவது.. இப்படத்திற்காக Junglee Pictures என்னை அணுகி, இக்கதையை கூறியபோது மிகப்பெரிய ஆச்சர்யம் உண்டானது.  ஆரம்பத்தில் வாழ்வை முன்னேற்றும்  நம்பிக்கை மிக்க கதையாக ஆரம்பித்து தடாலென தடம் மாறி ஒவ்வொரு பெண்ணுக்குமான எச்சரிக்கை கதையாக மாறி நின்றது பெரும் அதிர்ச்சியை தந்தது. வாழ்வின் மிகச்சிறிய ஒரு தருணம் உங்களை சந்தர்ப்பவாதியாக்கலாம் அல்லது குற்றத்தின் பாதிப்பில் சிக்கிகொள்பராகவும் மாற்றலாம்.  சமூகத்தில் மிகப்பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராக ஜீவஜோதி பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அவரின் போராட்டம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த கூடியது. அவரது இந்த போராட்டம் எனக்கு மட்டுமல்ல மொத்த பெண் உலகத்திற்கும் மிகப்பெரும் பாடத்தை கற்றுதந்துள்ளது. இந்தகதை ஒரு பக்கம் குற்றத்தின் பிடியில் சிக்கி கொண்டு உயிர் பிழைக்க போராட்டம் நடத்திய கதையையும், இன்னொருபுறம் மிகப்பெரும் பணமும், அதிகாரமும், சக்தியும் எத்தனை தீய வழிகளுக்கு இட்டு செல்லும் என்பதையும் சொல்கிறது. இப்படியான கதையை எழுதுவது அற்புதமான சாவல்.  இதை எழுத ஆரம்பிக்க மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் என்றார். இத்திரைப்படத்தில் பங்கு கொள்ளவுள்ள திறமையாளர்கள் குறித்து மிக விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். Junglee Pictures  நிறுவனம் சார்பாக கூறப்பட்டதாவது,,, மிகப்பெரும் ஆச்சர்யமளிக்கும் இந்த புதினத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கு மிக ஆர்வமுடன் காத்திருக்கிறோம். இந்த வழக்கு இந்தியா மட்டும்மல்ல உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு. இருபது ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, இறுதியாக சுப்ரீம் கோர்ட் 2019 ல் தீர்ப்பு வழங்கிய போது தான் முடிவுக்கு வந்தது. தமிழக கிராமத்தின், ஒரு முனையில் ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவித்த ஒருவர்,தன் நம்பிக்கையால்  உலகம் முழுக்க பிரபலமான உணவங்களை எழுப்பி ஜெயித்த கதை, தடாரென திரும்பி அதிர்ச்சிதரும் சம்பவங்களுக்குள் பயணித்து, ஜீவஜோதியின் நியாயத்திற்கான 18 வருட போராட்டததை உண்மைக்காக அவரின் நீண்ட பயணத்தை நம்பிக்கை கதையை சொல்லும்.  வாழ்வின் பாடத்தை தரும் இந்த அற்புதமான கதையை திரையில் உங்கள்  பார்வைக்கு கொண்டுவர ஆர்வமுடன் காத்திருக்கிறோம். உண்மை சம்பவங்களை கொண்டு அற்புதமான கதைகள், வித்தியாசமான களங்களின் பின்னணியில் உருவாகும் தரமான படைப்புகள், என இந்தி திரையுலகத்தில், பாலிவுட்டில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறது Junglee Pictures நிறுவனம். தற்போது Rajkummar Rao  மற்றும்  Bhumi Pednekar,  நடிப்பில்  ‘Badhaai Do’ திரைப்படத்தையும்  Ayushmann Khuranna மற்றும்  Rakul Preet Singh நடிப்பில்   ‘Doctor G’  படத்தையும் தயாரித்து வருகிறது.

மக்கள் தொடர்பு: டி ஒன்