ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் படம் “இதயம் முரளி”

டாவுன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.  தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி   படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி”  படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் டாவுன் பிக்சர்ஸ். “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அதர்வா , பிரீத்தி முகுந்தன் , கயாது லோஹர் , நட்டி , தமன் ,நிஹாரிகா , ரக்சன் , திராவிட் , ஏஞ்சலின் , பிரக்யா நாக்ரா , சுதாகர் , யாஷஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்*******

நடிகர் அதர்வா பேசியதாவது…, ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது…, தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி.