சிங்கார வேலரின் 163 வது பிறந்தநாள் நினை வேந்தல் மற்றும் வழக்கறிஞர் லிங்கனுக்கு சிறப்பு செய்வித்தல் நிகழ்ச்சி சென்னை பாலன் இல்லத்தில் “இஸ்கப்” சார்பில் நடந்தேறியது. செயலர் செந்தில்குமார் வரவேற்றிட வழக்கறிஞர் தேசிங் தலைமை யேற்று கூட்டத்தை வழி நடத்தினார்.*******
துருக்கி சிரியாவில் பூகம்பத்தால் உயிரி ழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது! சிங்காரவேலரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அவரது வாழ்க்கை செயல்பாடுகள் குறித்து வி.கே.கோபாலன், ஆனந்தராவ் , இதழாளர் இசைக்கும்மணி, பாரதி, வழக்கறிஞர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர்உரை நிகழ்த்தினர். வழக்கறிஞர் லிங்கன் ஏற்புரைத்து பேசினார்! சென்னை கிழக்கு கடற்கரைசாலைக்கு சிங்காரவேலர் சாலை என பெயரிட வேண்டும், சிங்காரவேலருக்கு சிலைவைத்து மணி மண்டபம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. திரளாக வந்திருந்தோருக்கும் வாழ்த்துரைத் தோருக்கும் தமிழ்மது நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவுற்றது.