RSP கட்சியின் கொடி யேற்றுதல் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது

கடந்த 04.01.2025 .சனிக்கிழமை  மாலை சுமார் 4.30.மணியளவில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்டப்பகுதி எழில்நகரில்  புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் பெரும்பாக்கம் கிளை சார்பில்  RSP .கட்சியின் கொடி யேற்றுதல் ,மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது  .UTUC யின் தேசிய குழு உறுப்பினரும் சென்னை  உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான தோழர் க. தேசிங்  அவர்கள்  செங்கொடியேற்றி பெயர்பலகையினை திறந்து வைத்தார்.

மாலை 05.00மணிக்கு பெரும்பாக்கம் எழில்நகர் பிளாக் 129.அருகில்  தெருமுனைக்கூட்டம்  RSPயின் மாவட்ட பொருளாளர் தோழர் கு. காமாட்சி  அவர்கள் தலைமையேற்க, UTUCயின் மாவட்ட பொருளாளர் தோழர் சண்முகப்பிரியா அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்தினார்.

 UTUC- யின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தோழர் M.கொளதமன் ,UTUC- யின் வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் J.செந்தில் குமரன், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும்,மின்வாரிய தொழிற்சங்க  தலைவர்களில் ஒருவருமான தோழர் K.நாராயணமூர்த்தி ,RSP-  கட்சியின் மாவட்ட துனைசெயலாளரும், மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளருமான தோழர் N. பழனி மற்றும் ,RSP- கட்சியின்  பெருநகர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் க.தனபால். ஆகியோர் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு  இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்திட  நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை  விடுத்தனர்.

 நிறைவாக UTUC-யின் தேசிய குழு உறுப்பினரும்,சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தோழர் க தேசிங். M A.M L.அவர்கள்  பல லட்சம் மக்கள் வாழும் பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலனில் அரசு அக்கறை கொள்ளவேண்டும்.நாங்கள் நடத்துவது மக்களுக்கான போராட்டம், குறிப்பாக” U” பிளாக் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்பலி  நிகழும் முன் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியதோடு,  விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு  மறுக்கும் பட்சத்தில்  தமிழ் நாடு வா ழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் அலுவலகம் முற்றுகையிடப்படும்  என எச்சரிக்கை விடுத்தார்.

நிறைவாக  RSP- யின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் மேரிரூபன் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. இரவு  7.00 மணியளவில் பிளாக் 69-ல் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் பெரும்பாக்கம் எழில்நகர் கிளை அலுவலகம் தோழர் க. தேசிங் MA.ML.அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. கட்சி, மற்றும் தொழிற்சங்கத்தை சார்ந்த மாவட்ட,மாநில நிர்வாகிகள்  உட்பட பொதுமக்கள்  சுமார்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.