பெரும்பாக்கம் எழில் நகரிலுள்ள தென்சென்னை மாவட்ட R.S.P.அலுவலகத்தில 03.04.2025 வியாழக்கிழமை மாலை சுமார் 6.00மணியளவில் தோழர் T.ராணி அவர்கள் தலைமையில் U.T.U.C தென்சென்னை மாவட்ட மகளிர் ஆட்டோ ஓட்டுனர் சங்க துவக்கத்தின் அமைப்பு நிலை கூட்டம் நடைபெற்றது. இச்சிறப்புமிகு கூட்டத்திற்கு U.T.U.C.யின் தேசியக்குழு உறுப்பினரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A. M L. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (R.S.P.) தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் க.தனபால். வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் J.செந்தில் குமரன், ஐக்கிய மகிளா சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் கு.காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் U.T.U.C யின் தென் சென்னை மாவட்ட மகளிர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட தலைவராக தோழர் E.மகாலட்சுமி , பொதுச்செயலாளராக தோழர் கோமளா தேவி , துனை தலைவராக தோழர்R.ஸ்ரீதேவி, துனை செயலாளராக தோழர் லட்சுமி, பொருளாளராக தோழர் A.சோபியா மேரி ஆகியோர் ஒருமனதாக தேர்வு பெற்றனர்.
விரைவில், தென் சென்னை முழுவதும் ஆட்டோ ஓட்டும் பெண்களை ஒன்றிணைத்து கிளைகளை அமைப்பது என்றும், அதனையொட்டி மாவட்ட மாநாடு நடத்துவது என்றும் ,தமிழக அரசு உடனடியாக மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக பொதுச்செயலாளராக தேர்வு பெற்ற தோழர் கோமளவல்லி அவர்கள் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டும் மகளிர் கலந்து கொண்டது சிறப்பாகும். மகிழ்கிறது உள்ளம் வாழ்த்துகிறது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி(R.S.P) U.T.U.C. மற்றும் ஐக்கிய மகிளா சங்க தென் சென்னை மாவட்ட குழுக்கள்.