கடந்த 20 ஆண்டுகளாக வடமாநிலத்தை சார்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் உள்ள 39 மாவட்ட தலைநகரங்களில் 20 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்து கிராமங்களிலும் 1 கோடிக்கு மேற்பட்ட பீகார், உத்திரபிரதேஷ், உத்திரகாண்ட், ஜார்கண்ட், ராஜஸ்தான், வெஸ்ட் பெங்கால் மற்றும் வடமாநிலத்தை சார்ந்த வேலையற்ற இளைஞர்கள் தமிழகத்தில் ஊடுருவி பலவகையான சமூகவிரோத செயல்களிலும் குழு குழுக்களாக பிரிந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், கூட்டுசதி போன்ற தொழிரீதியான முனைப்புடன் செயல்படும் சமூகவிரோத கும்பல் தமிழகத்தின் உடைய செழுமை, வளமை, பொருளாதார வளர்ச்சி, கல்வியில் முதலிடம் அறிந்து தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிக்கும் மிகப்பெரிய சவாலாக திகழ்வதை சமீபகாலமாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வறுமையின் காரணமாக தமிழகத்தில் பிழைப்பு நடத்துவதற்காக வந்து பெரும் கட்டிடங்கள், பாலங்கள் போன்ற பணிகளில் அமர்த்தி இரவு, பகல் பாராமல் கடும் வெயில், மழையில் வேலை செய்யும் தொழிலாளியின் அடிப்படை உரிமைகளையும் சேமநலன்களையும் அவர்கள் குடும்பதையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். தமிழகத்தில் அனைத்து கிராமங்களில், நகரங்களிலும் வெளி மாநிலத்தை சார்ந்தவர்கள் பானி பூரி, புர்கா போர்வை, பஞ்சுமிட்டாய், ஐஸ் விற்பது, தள்ளுவண்டி வியாபாரம் என்கிற போர்வையில் பகலில் வீடுகளையும், குடும்ப சூழ்நிலைகளையும் குறியீடுகளிலும், சங்கோஜ மொழிகளிலும் குடும்பத்தின் பொருளாதா தன்மையை அறிந்து வீடுகளில் இரவு நேரங்களில் ஆட்கள் இருந்தால் மனசாட்சி இல்லாமல் கொலை செய்து விட்டு வீட்டில் இருக்கும் பொருளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுகிறார்கள். கிராமம் மட்டும் இன்றி தலைநகரங்கள் வரை இவர்கள் பஞ்சமா பாதகம் செயல்கள் தமிழக மக்கள் மத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள பெரிய ஒட்டல் முதல் சிற்றுண்டி, விடுதிகள், தேநீர் கடைகளிலும் அனைத்து தொழில்களிலும் நேரடியாகவும், இடைத்தரகர் ஆகவும் செயல்படுகிறார்கள். தமிழகத்தின் உடைய காவல்துறையும், நுண்ணறிவு துறை, புலனாய்வுத்துறை, சைபர் கிரைம் ஆகிய துறைகள் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இதுவரை வெளி மாநிலத்தார் செய்த குற்றச் செயல்களை குற்ற ஆவணத்துறைக்கும், உள்துறைக்கும் முறையான தகவல்களை பதிவு செய்வதுடன் இனி வருங்காலங்களில் பேருந்து நிலையம், ரெயில் நிலையங்கள், சந்தைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கில் காவல்துறை கண்காணிப்பு வளையத்தை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தின் உள்ளே வரும் வெளிமாநல கனரக வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதுவரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ள காவல்துறை வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை அவர்களின் குடும்ப விவரங்களையும் குற்ற பின்னணியும் முழுமையாக ஆய்ந்து அறிந்து வெள்ளை அறிக்கையாக மாவட்ட செய்தி குறிப்பில் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது காவல்துறை மற்றும் அரசின் கடமையாகும். வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பித்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் அவர்களை பிடிப்பதற்கு மிகவும் சிரமம். தமிழக மக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். மேலும் தமிழக மக்கள் நலனையும், உண்மையில் வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வருபவர்களை பாதுகாக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா? என பொதுமக்களின் எதிர்பார்ப்பு.