டிஜி பிலிம், மக்னாஸ் புரடெக்ஷன் இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்“அலங்கு”*தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில்முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்தஅரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின்அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபலமலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதைநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .*******
இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இருதிரைப்படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் வெற்றிபெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ்தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையேஇணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபிதிரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது
அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின்படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் காலபோக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள்கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி,அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில்தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு .
முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வனவிலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்குவரும் எனவும் படக்குழு தெரிவித்தது .
CAST & CREW
நடிகர்கள்: குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின்ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர்.
படக் குழுவினர் ; எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல் ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார் இசை : அஜீஷ் கலை இயக்குனர் : P.A. ஆனந்த் படத்தொகுப்பு : சான் லோகேஷ் சண்டை பயிற்சி : தினேஷ் காசி ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G ஒலி கலவை : சுரேன்.G நடனம் : அசார், தாஸ்தா கூடுதல் கலை இயக்குனர் : தினேஷ் மோகன் ஒப்பனை : ஷேக் பாஷா விலங்கு பயிற்சி : செந்து மோகன் ஆடை : T.பாண்டியன் ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் J பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன் கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக் கலரிஸ்ட் : ரங்கா வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ தயாரிப்பு நிர்வாகி : S.முருகன் தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு தயாரிப்பு மேலாளர் : RK.சேது உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட் மக்கள் தொடர்பு : R.குமரேசன் விளம்பர வடிவமைப்பு : தண்டோரா விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன் நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS