தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், இ.கா.ப., கோவை மாநகர காவல் ஆணையாளர் ஏ.பாலகிருஷ்ணன், இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., கோவை சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுடன் 30.08.2024 மற்றும் 31.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கோயம்புத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்களுடைய பணித்திறமையை மேலும் மேம்படுத்த அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
30.08.2024 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கோவை சரக காவல் அதிகாரிகளுடன் கோவை சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும், கணிணி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சட்ட விரோதமாக விற்கப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை பேணவும் நல்வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
2024-ம் ஆண்டு கோவை காவல் சரகத்தில் 675 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் 749 எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 738 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் வழக்கமாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் செயலில் ஈடுபட்டு வந்த 36 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் 2024-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 1731 இடங்களில் சோதனை செய்ததில், 1294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் 1300 எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 12916 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 725 கடைகள் காவல்துறையினரால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் மூலம் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளன. அதுபோன்றே, கோவை சரக காவல்துறையினர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து இக்காவல் சரகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 7367 கடைகளில் சோதனை செய்து, குட்கா தொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து 11 வழக்குகள் பதிவு செய்து, அவ்வழக்குகளில் தொடர்புடைய 11 எதிரிகளை கைது செய்து, 323 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, 9 கடைகளை மூடி முத்திரை வைத்துள்ளனர். இவைகளை ஆய்வு செய்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சமூகத்திற்கும், இளைய தலைமுறைக்கும் ஊறு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவது பற்றியும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.
அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின்படி உரிய வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகளை வழங்கினார். இவ்வினங்களின் கீழ் இவ்வாண்டில் சட்டவிரோத மதுவிற்பனை செய்தவர்கள் மீது கோவை காவல் சரகத்தில் 8722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8808 எதிரிகள் கைது செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 102 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 23 எதிரிகள் மீது (டீழழவடநபபநசள) குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 109 வாகனங்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி பொது மக்களின் முன்னிலையில் ஏலம் விடுவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
கோவை காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குற்ற சம்பங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கு, காவலர்களின் ரோந்து பணி, குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அழைப்பாணையை சார்பு செய்யும் பணி, நீதிமன்ற பணி மற்றும் காவலர்களின் அன்றாட பணிகளை இதற்காக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள ளுஅயசவ முயஎயடயச யுிி என்ற செயலி மூலம் முறையாக நெறிப்படுத்த தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் கோவை சரக மாவட்டங்களில் உள்ள ரௌடிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவர்களை கண்காணிப்பதற்காக தனி காவலர்கள் அடங்கிய குழுவை அமைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அறிவுரை வழங்கினார். கோவை காவல் சரகத்தில் 2024-ம் ஆண்டு 698 ரௌடிகளிடமிருந்து நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை பிணையை மீறியதற்காக 3 ரௌடிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலிலிருந்து பிணையில் வெளியில் வந்த 24 ரௌடிகளின் பிணையை ரத்து செய்து, பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள ரௌடிகளுக்கு ஜாமீன் கொடுத்த 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 27 ரௌடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோவை காவல் சரகத்தில் உள்ள ரௌடிகளின் சொத்துக்களின் மீது நிதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஓராண்டில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 ரௌடிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 ரௌடிக்கு கடுங்காவல் தண்டனையும் நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது.
கோவை காவல் சரகத்தில் புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களைப் பராமரித்தல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பழுதுகளை கண்டறிந்து அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். 31.08.2024 அன்று காலை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கோவை காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் கோவை மாநகர காவலில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பான முகாம் நடத்தி, அக்குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட 711 காவல் அலுவலர்கள் ஃ ஆளிநர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களின் குறைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து தீர்வு வழங்கினார். மேலும், கோவை காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் கோவை மாநகர காவல் எல்லைக்குள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்களில் திருட்டு போன பொருட்களை மீட்டு உரிய நபர்களிடம் உரிய நேரத்தில் ஒப்படைத்தும், வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரௌடிகளை கைது செய்தும் சிறப்பாக பணிபுரிந்த 51 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு பணி பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஃ படைத்தலைவர் பாராட்டினார்.