25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. துப்பாக்கிசுடும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர கடுமையாக போராடினர். தமிழ்நாடு காவல்துறை அகில இந்திய காவல்துறை துப்பாக்கிசுடும் போட்டியை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், கமாண்டோபள்ளி பயிற்சி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 17.03.2025 முதல் நடத்தப்பட்டது. 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கிசுடும் போட்டி 2024-2025 ன் பிரம்மாண்டமான நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதியநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. வரவேற்று ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள், நடுவர் குழுவினர்கள், குழு மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் அலங்கார காப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் பெருமை ஆகியவற்றின் அடையாளமாக தோழமைஉணர்வை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் அணிவகுப்புமரியாதையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற வீரர்களின் விபரம் பின்வருமாறு ரைபிள் துப்பாக்கிசுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்தஅணி) அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லைபாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை அசாம் மாநில காவல்துறையும் பிடித்தார்கள். பிஸ்டல் ஃரிவால்வர் துப்பாக்கிசுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்தஅணி) மத்திய சேமக் காவல் படையும், இரண்டாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், மூன்றாவது இடத்தை தமிழ்நாடு காவல்துறையும் பிடித்தார்கள். கார்பைன் ஃஸ்டென்கன் துப்பாக்கிசுடும் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை (சிறந்தஅணி) இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படையும், இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல்துறையும், மூன்றாவது இடத்தை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும் பிடித்தார்கள். அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையும், இரண்டாவது இடத்தை எல்லை பாதுகாப்பு படையும் பிடித்தார்கள். மாநிலங்களுக்கிடையே ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட அணியாக சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு காவல்துறையும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஒடிசா மாநில காவல் துறையும் பிடித்தார்கள். பிஸ்டல் ஃரிவால்வர் துப்பாக்கி சுடும் பிரிவில் சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு.அமர் சிங் சிறந்த சுடுதலுக்கான (டீநளவ ளுாழவ) பரிசையும், கார்பைன் ஃ ஸ்டென்கன் துப்பாக்கிசுடும் பிரிவில் இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படை காவலர் திரு. விஷால் குமார் சிறந்த சுடுதலுக்கான (டீநளவ ளுாழவ) பரிசையும் வென்றார்கள். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதியநிதி ஸ்டாலின் அவர்களால் நினைவுப்பரிசு வெளியிடப்பட்டது. மேலும் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கிசுடுதல் போட்டி 2024-2025 நிறைவு பெற்றதாக அறிவித்தார்.
பின்னர், 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி நிறைவு பெற்றதை முன்னிட்டு அகில இந்திய காவல்துறை விளையாட்டுகட்டுப்பாட்டுவாரிய கொடியை சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார். தமிழ்நாடு பேண்ட் வாத்தியகுழுவினரின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சியுடன் நிறைவுவிழா இனிதே முடிவுற்றது.