கடத்தப்பட்ட வழக்கறிஞரை துரிதமாக மீட்ட மதுரை மாநகர காவல்துரையினரை பாராட்டிய டி.ஜி.பி.சங்கர் ஜியால்

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு  உட்பட்ட தமுக்கம், கருப்பண்ணசாமி கோவில் அருகில் ஒரு நபரை சிலர் வலுக்கட்டாயமாக ஏற்றி செல்வதாகவும், அந்த நபர் தன்னை காப்பாற்றும்படி அலறியதாகவும், எனவே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதைப் பார்த்த அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாநகர ஆயுதப்படைகாவலர் விக்னேஷ்குமார் என்பவர் தகவல் அளித்துள்ளார். உடனடியாக, அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் கடத்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்து மீட்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை உடனடியாக சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த மறைக்காணி பதிவுகளை பெற்று பரிசீலனை செய்த போது, கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட பதிவெண் இல்லாத டொயாட்ட கிளான்ஸா காரை ஒரு இருசக்கர வாகனம் பின் தொடர்ந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மேற்படி இருசக்கர வாகனம் சரித்திரப் பதிவேடு குற்றவாளி கௌதம் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. உடனடியாக தனிப்படையினர் கௌதம் இருப்பிடத்தை கண்டறிந்து அவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகிலிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்து கடத்தப்பட்ட செந்தில்வேல் (வயது 32) வழக்கறிஞரை மீட்டுள்ளனர். அவ்வழக்கறிஞர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை  சேர்ந்தவர். கடத்தலில் பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை, தமிழ்நாடு காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால் சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்களை வழகினார்.